இன்றைய ராசி பலன் – 7-11-2020

rasi palan - 7-11-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் உங்களுடைய மனோதைரியம் மற்றவர்களை வியக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமாக நாளாக அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதவி உயர்வு, கௌரவம், அறியாத அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் களைப்புடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவை டென்ஷனை ஏற்படுத்தலாம். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் கைக்கூடி வரும் யோகமுண்டு. குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். தலைவலி முதுகு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான விரயங்கள் வீணாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பணரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அடுத்தவர்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் காரியங்கள் குழப்பங்களை ஏற்படுத்தலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது களைப்புடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் இருப்பவர்கள் நவீன பொருட்களை வழங்கும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமையும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் நிதானம் தேவை. வார்த்தைகளை விடுவதற்கு முன் யோசித்து விட்டால் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக நடக்கும். இதுவரை இருந்துவந்த கடன்கள் குறைய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வணிக ரீதியான பயணத்தின் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முன் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உங்களை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்களை சுற்றி பலர் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்பட நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு காரியத்தையும் செய்து விடாதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மூளையை பயன்படுத்தினால் முன்னேற்றம் காணலாம். சவால்கள் நிறைந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் அசதி, போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது உத்தமம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை கொடுக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய யோகம் வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. நீண்ட நாள் வகுப்பறையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -