இன்றைய ராசி பலன் – 7-12-2020

rasi palan - 7-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் எளிதாக எடைபோடும் உங்கள் ராசிக்கு நல்லதாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபட நல்லது நடக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கருணை உள்ளம் அதிகமாகக் கொண்ட உங்கள் ராசிக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமண பேச்சுகைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் முன்னேற்றத்தில் குறைவிருக்காது. விநாயகரை வழிபட நன்மைகள் பிறக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காலையில் கண் விழிக்கும் பொழுதே புதுவிதமான உற்சாகம் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை திடீரென சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறு பிரச்சினை ஏற்படலாம். சுயதொழில் புரிபவர்கள் லாபம் காண்பீர்கள். பைரவரை வழிபட தைரியம் பிறக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலகலப்பாகப் பேசும் உங்கள் ராசிக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கிரகங்களின் சாதக அமைப்பு சுப காரியத்தை கைகூட வைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் மூலம் புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையே தனி குணமாக கொண்டு விளங்கும் உங்கள் ராசிக்கு நல்லது நடக்கும். உங்களுடைய எதிரிகளும் பகைவர்களும் பிரச்சனைகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எனினும் மனம் தளராத நீங்கள் இறுதியில் வெற்றி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு என்பதால் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக உள்ளது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணரீதியான விஷயத்தில் எச்சரிக்கை அவசியம் ஆகும். உங்களுடன் இருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அடுத்தவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழிலில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. அம்பிகையை துதியுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்க இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் நல்ல முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஒரு சிலருக்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். வேலைப்பளு அதிகரிப்பதன் மூலம் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்பான விஷயத்தில் சுபச் செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவரும் உங்கள் ராசிக்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் லாபம் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க திறம்பட கையாள்வார்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் ஓரளவிற்கு படிப்படியாக குறையும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மறையலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.