இன்றைய ராசி பலன் – 7-2-2020

rasi palan - 7-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில மன சங்கடங்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். எதிர்பாராத நபர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கடன் பிரச்சனை மேலோங்கி காணப்படும். வாங்கிய கடனுக்காக மேலும் ஒரு கடன் வாங்க வேண்டியிருக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நன்மை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் வந்து மறையும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கடன் பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியம் உங்களிடம் குடிகொள்ளும். ஏதாவது செய்து எப்படியாவது உங்களது வாழ்க்கையை சரி செய்ய நினைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக சிறிது சோர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் செய்ய ஏற்ற இடங்களை தீர்மானிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் இழுபறி இருக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிட மாற்றம் சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பற்றாக்குறை நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உருவாகும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்னர் விநாயகரை வழிபட்டு தொடங்குவது நன்மை தரும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் விரயங்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். செய்யாத தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான எண்ணம் மேலோங்கி காணப்படும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண்விரயம் ஆகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விரயங்களை கட்டுப்படுத்த சரியான திட்டமிடல் அவசியமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாய்ப்புகளை நாடிச் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகி குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வந்து விடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். கூட்டுத்தொழில் புரிபவர்கள் வேலையில் முனைப்புடன் இருப்பீர்கள். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் காணப்படும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சியில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாக தொழில் புரிவதை விட தனியாகவே தொடங்குவது நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோம்பேறித்தனமாக இருக்கும். அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்காது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். ஒரு சிலருக்கு வீட்டைப் புதுப்பிக்கும் சூழ்நிலை உண்டாகும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் அமையப்பெறும். எந்த முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இறை சிந்தனைகளில் மூழ்கி இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில கசப்பான சம்பவங்களை சந்திக்க நேரிடலாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. புதிய தொழில்நுட்பங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக அதிக சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணப்பரிவர்த்தனையில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் புதிய சாதனைகளை புரிந்து பாராட்டு பெறுவீர்கள். தாய்நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை சந்திக்க கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சவால்கள் நிறைவேற்றும் பொறுப்புகள் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு வாகன வகையில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கான சூழ்நிலை நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி இருப்போருக்கு நல்ல தகவல் கிட்டும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் விரக்தியுடன் காணப்படும் ஒரு நாளாக இருக்கும். என்னடா இந்த வாழ்க்கை என்கிற ஒரு மனப்போக்கு உண்டாகும். வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு வரும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனதை சாந்தப்படுத்த முயன்று பாருங்கள். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான நிலை இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முடிவுகளை எடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து மறையும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு பரிபூரணமாக கிட்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு நண்பர்களின் உதவி இருக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பொறுமை தேவைப்படும் ஒரு நாளாக இருக்கும். யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி கொண்டு அந்த காதில் விட்டுவிடுவது நல்லது. தேவையற்ற குழப்பங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இறைவன் மேல் பாரத்தைப் போட்டு வேலையை பார்ப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து மறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் ஓரளவுக்கு சீராகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். மாணவர்களின்கல்வி நிலை சீராக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.