இன்றைய ராசி பலன் – 7-4-2020

rasi palan - 7-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். சொந்த தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலையில் சில தொல்லைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. எதிரிகளின் தொல்லைகள் பல சங்கடங்கள் வரக்கூடும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வருமானம் தரும் நாளாக இருந்தாலும் சற்று பற்றாக்குறைகள் இருந்து வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தன்னுடைய தொழிலில் கவனத்தை கூடுதலாக செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். சுபகாரியங்களை பற்றி சிந்திப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். புது தொழில்களை பற்றி சிந்திப்பீர்கள். சொத்து வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை மனதில் தோன்றும். புதிதாக லோன் வாங்குபவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளாகவும் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தை சந்தோஷம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி உண்டு. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருந்து வரும். வயதானவர்களுக்கு உடல்நிலை நன்றாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொத்து வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.அரசியல் இருப்பவர்களுக்கு இறுதியில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும். திருமணம் தொடர்பான காரியங்கள் வெற்றி அடையும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் அதிகமாக வாய்ப்புண்டு. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு ஏற்ற மிகுந்த காலமாகும். கல்வி மேம்படும். சுபகாரியங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். எதிர்காலத்தை பற்றி திட்டமிடுவீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் மற்றும் உத்தியோக உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் சிறப்பாக இருந்து வரும். புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மேலாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்கிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதொரு நாளாகும். பேச்சில் நிதானம் தேவை. உங்களுடைய பேச்சு உங்களுக்கு எதிராக மாறலாம். பெண்களுக்கு சமமான நாளாக இருக்கும். குடும்பத்தில் நிதானமான போக்கை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தனவரவை தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலையில் நல்ல பெயர் எடுக்கும் காலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றமிகு காலமாகும். ஒரு சிலருக்கு பிரயாணம் செல்ல நேரும் அல்லது புதிய பிரயாணத்தை பற்றி திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொறுமையாக காரியங்களை நிறைவேற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கையில் சேமிப்பு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அன்பை பரிமாறிக்கொள்ள ஏற்றுவது ஒரு நாளாக இன்றைய நாள் அமையும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகும். வேலையாட்களால் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். வாகன வகை மற்றும் சொத்து வகையில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல பெயரை வாங்க முடியும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் நாளாக இன்றைய நாள் அமையும். ஒருசிலர் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகும். உடன்பிறந்தவர்களால் மன மகிழ்ச்சி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு அனுகூலமான காலமாகும். மாணவர்களுடைய கல்வி மேம்படும். கல்லூரியில் விரும்பிய இடத்தில் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றம் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.