இன்றைய ராசி பலன் – 7-05-2021

rasi palan - 7-5-21

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். குடும்பத்தில் அவர்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய காலமாக இருக்கும். பெண்களுக்கு இனிய நாளாக அமையும். அம்பிகையை துதியுங்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை உங்களுக்கு மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தீர்ந்துவிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விக்கி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விநாயகரை வழிபடுங்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வெளிவட்டாரத் தொடர்புகளால் ஆதாயம் காணலாம். பெண்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சங்கடங்கள் தீர சண்டிகேஸ்வரரை வழிபடுங்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மனக்குழப்பம் நீங்க மகேஸ்வரனை வழிபடுங்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னின்று மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து. வந்த மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும் அற்புதமான நாளாக அமையும். கால பைரவரை வழிபட பயம் நீங்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றல் நன்மைகளை தரும் வகையில் அமைய இருக்கிறது. பெற்றோர்களின் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் சீராக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு மன பலம் அதிகரித்து காணப்படும். மஹாவிஷ்ணு வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் கூடுமானவரை பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும், இருக்கின்ற பிரச்சனைகள் தீரக் கூடிய வாய்ப்புகள் அமையும். அனுமனை வழிபட நல்லது நடக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கி முன்னேற்றம் சீராக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கவனம் தேவை. கந்தசஷ்டி கவசம் படிக்க மனோபலம் கூடும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்க கூடிய அமைப்பு உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் உங்களுடைய கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்களை பெற போகிறீர்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் அன்னோன்யம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. முருகனை துதியுங்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப அவர்களுடைய அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான புதிய உபகரணங்களை வாங்கக்கூடிய ஆலோசனை இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் உங்களை விலக்கி வைத்தவர்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு தடைகள் யாவும் விலகும். புண்ணியம் சேர நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மனக்கவலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் தீர்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடன் பணிபுரிந்தவர்கள் உங்களை விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டு உணவுகளை சாப்பிடுவது உத்தமம்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல தடைகள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.