இன்றைய ராசி பலன் – 7-5-2020

rasi palan - 7-5-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது.சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பதால் அதிகம் லாபம் ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது. நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டார்கள். உத்தியோகத்தில் ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் அனுகூலமான நாளாகும்.தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. பயணத்தால் அலைச்சல் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். குழந்தைகளின் படிப்பில் அதிகம் கவனம் தேவை. கூட்டு முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரம் மந்தமாக இருக்கும். நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அரசாங்க உத்தியோகம் காரைக்குடி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள் ஆகும். குடும்பத்தில் நடக்கும் முக்கிய முடிவுகளுக்கு உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் வியாபாரிகளால் சிறிது மனக்கசப்பு வந்து நீங்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக இருப்பதன் மூலம் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவுகளை ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வதால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் வந்து நீங்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் ஊழியர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். சொந்த தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு செலவுகளை சமாளிப்பதற்கும் கடன் வாங்கவும் நேரிடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குழந்தைகளின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடும். மனைவி உங்கள் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படுவதால் விற்பனை மந்தமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புகழ் உண்டாகும் நாளாக அமையும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முடித்துக் காட்டுவீர்கள். வீண் செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு கையிருப்பு குறையும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிறிது மனக்குழப்பம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அலைச்சல்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் அலைச்சல்கள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த பணம் வருவதுடன் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்வதன் மூலம் அன்னியோன்யம் அதிகரிக்க கூடும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் அவசரமில்லாமல் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் செலவுகள் செய்வதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதால் அவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சிந்தனைகளால் பல வெற்றிகளை நீங்கள் காண்பீர்கள். பிள்ளைகளால் சிறித மனக்குழப்பம் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் செய்யும் பணியில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரணையாக செல்வது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.வியாபாரத்தில் வியாபாரிகளால் சிறிது பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையப்போகிறது. மனைவி மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும். சகோதரர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாளாக சந்திக்க நினைப்பவர்களை சந்திப்பீர்கள். உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக இருக்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் அனைத்தும் முடியக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -