இன்றைய ராசி பலன் – 7-7-2020

rasi palan - 7-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கணவன்-மனைவிக்கிடையே அனுமதி அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பிள்ளைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இது அமைகிறது. வாழ்க்கை துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். பணியாளர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள். ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள். குடும்ப பொறுப்புகளை முடிப்பதில் சற்று அலைச்சல்கள் ஏற்படக்கூடும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவதால் தடங்கல்கள் நீங்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் குடும்பத்தாரிடம் கலந்து பேசுவது நன்மை தரும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. ஒருவரிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. நண்பர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக இருப்பது நல்லது. மனைவிவழி உறவினர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். வீடு வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய தொழிலில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடுவீர்கள். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். திருமணம் சுபநிகழ்ச்சி காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கை துணையால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்து கொடுப்பீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படும். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் சஞ்சலங்கள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேலை உங்களுக்கு கிடைக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைக்கேற்ற பணம் உங்கள் கையில் இருந்தாலும் பணத்தை கவனமாக செலவு செய்வது நன்மையை தரும். உங்களின் அனைத்து முயற்சிக்கும் உங்கள் வாழ்க்கை துணை ஆதரவாக இருப்பார். தாயின் மீது அன்பு செலுத்துவது மகிழ்ச்சியை தரும். காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்டநாளாக வராத கடன் தொகை வந்துசேரும். வியாபாரத்தில் அதிகம் லாபம் ஈட்டுவீர்கள் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி உண்டாகும் நாளாக அமைகிறது. வாழ்க்கைத்துணை நீங்கள் ஆசைப்படுவதை நிறைவேற்றுவார். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். எதற்காகவும் யாரையும் நம்பி விட வேண்டாம். அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.