இன்றைய ராசி பலன் – 8-4-2020

rasi palan - 8-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாளாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெண் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது மட்டும் ஆபரணம் சார்ந்த வகையில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும் அதனால் சற்று அலைச்சல் இருந்தாலும் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்வி மேம்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கை நன்றாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றி அடையும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஒரு சிலர் வெளியூர் பிரயாணங்கள் பற்றி அல்லது வெளிநாட்டு பிரயாணங்கள் பற்றி திட்டமிடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கும் மகிழ்ச்சிகரமான நாள். வரவு செலவு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாகும். காதல் தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு உங்கள் வீடுகளில் திருமணத்தைப் பற்றி பேச உகந்த நாளாகும். குடும்ப ஒற்றுமை மென்மை அடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். நீங்கள் ஒரு செயலை தன்னம்பிக்கையுடன் முன்னெடுக்கும் போது அது வெற்றியை தரும் வாய்ப்பு அதிகம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு உண்டாகும். ஒருசிலருக்கு பிரயாணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். கோவிலுக்கு சென்று வருவது ஆன்மீக குருமார்கள் மற்றும் மகன்களின் சந்திப்பு ஆசீர்வாதம் போன்றவை கிடைக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். தொழில் முயற்சிகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியும் ஆதாயம் உண்டு. சுப செயல்களை வெற்றி சந்திப்பீர்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார பற்றாக்குறை சிறிய அளவில் இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பம் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்க வேண்டிய கடன் திரும்பி தருவீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் அசதி உண்டாகலாம். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். இடமாற்றத்தை பற்றி யோசனைகள் அதிகமாக வந்து செல்லும். மாணவர்களுக்கு கல்வி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைபெறும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள். குழந்தைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களின் கல்வி மேம்படும். சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் மனதிலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் உதவி உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக வாய்ப்பு இருந்தாலும் சிறப்பான நாளாகவே அவர்களுக்கு அமையும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சமமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்து வரும். வாகன வகையில் சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும் செலவினங்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும். வெற்றிகரமாக அனைத்தையும் முடிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு தொழிலிலும் கவனம் தேவை.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும். கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்துவது நல்லது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். எடுக்கும் முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் காலம் கருதி செய்யும் வேலைகள் வெற்றி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.