இன்றைய ராசி பலன் – 8-5-2020

rasi palan - 8-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாகும். சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரித்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்வீர்கள். தந்தையிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை ஆக இருப்பது மிகவும் நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கக்கூடும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் அல்லது. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உயரதிகாரிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடமும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியில் முடிய வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும். புதிய கோணத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் பெரியவர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க கூடும். திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சிறிய அளவு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் வீன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எடுத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை நன்றாக முடித்து விடுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகள் மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் தொழிலாளர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். வியாபாரத்தில் தொழில் ரீதியாக சில பிரச்சனைகள் வந்து நீங்கும். நண்பர்களால் பண உதவி கிடைக்க கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையை அதிகரிக்கக்கூடும். சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். சொந்த தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் பணியாளர்கள் உதவியால் விற்பனை அதிகரிக்க கூடும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத உதவிகள் கிடைக்க கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிறிது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. உறவினர்கள் மூலம் திருமணம் போன்ற நல்ல செய்திகள் வர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவது நல்லது. வீண் செலவுகளை செய்வது தவிர்க்கவும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக அமையும். அரசாங்கம் பணி நல்ல முறையில் முடிவடையும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். எடுத்த காரியத்தில் தைரியமாகவும் துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். செய்யும் தொழிலில் லாபம் வழக்கம் போல இருக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடத்தில் பண உதவி கிடைக்க கூடும். வீண் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படுவதால் அவர்களிடம் பேசும் போது நிதானமாக பேசுவது மிகவும் நல்லது. வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையாக இருப்பீர்கள். தந்தையிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. உங்களின் பேச்சு திறமையால் எதிலும் வெற்றி அடைவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேர்ந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மனைவிவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் லாபம் வழக்கம் போலவே இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவி கைக்கு வந்து சேரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சிலருக்கு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. உங்கள் லட்சியத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வியாபாரம் உங்களுக்கு வழக்கம் போல இருக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். வண்டி வாகனங்களை கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.