இன்றைய ராசி பலன் – 9-08-2020

rasi palan - 9-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமையப் போகின்றது. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இது அமையப் போகின்றது. பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நாளாக அமைய போகின்றது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக அமைய போகின்றது. பணவரவு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் பண வரவு உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதர சகோதரிகளிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. மாணவர்களின் கல்வி சிறப்பாக அமையும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையப் போகின்றது. கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கக்கூடும். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகின்றது. இன்று உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் செய்பவர்களுக்கு சிறிது நிதானம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு மன கசப்புகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சிகள் மனநிறைவுடன் காணப்படும். பொருளாதாரம் பற்றாக்குறை உங்களுக்கு வந்தாலும் அதை நீங்கள் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நன்மை தரும் நாளாக அமைய போகின்றது. பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணவரவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. சுபநிகழ்ச்சிகள் மன சந்தோஷத்தை அளிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையப் போகின்றது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நல்ல செய்தி வந்து சேரும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மாணவர்களிடையே கல்வி நிலை நன்றாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக அற்புதமாக உள்ளது. ஒருசிலர் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எழுத்துக்கள் பூர்வீக சொத்துகளில் இருக்கும் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். பொருளாதாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பிள்ளைகளால் மன நிம்மதி ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் அதிர்ச்சி தரும் நாளாக அமையும். உத்தியோகத்தில் மேன்மை அடைய கூடிய நாளாக அமைய போகின்றது. கணவன் மனைவி இடையே அன்பு நிறைந்து காணப்படும். சுப காரியங்கள் மனநிம்மதியை தரும். மாணவர்களின் படிப்பில் வளர்ச்சி காண்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் நிதானமும் பொறுமையும் கடை பிடிப்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகின்றது. சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு சிறப்பான நாளாக அமையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவே பேச்சில் நிதானம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரியங்கள் உங்களுக்கு மன நிம்மதியை தரும். சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இது ஒரு சிறப்பான நாளாக அமைய போகின்றது. காதல் தொடர்பான காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது ஒரு சிறப்பான நாளாக அமையும். பெரியோர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நன்மை உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -