இன்றைய ராசி பலன் – 9-1-2021

rasi palan - 9-1-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் ததும்பிய முகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பணவரவு வந்து மனமகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் அமைந்திருக்கின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான சிந்தனை தேவை. கவனக் குறைவுடன் இருந்தால் வீண் பழிகளை சுமக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் நெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் பல முறை ஆலோசனை செய்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து மௌனம் காப்பது நல்ல நாளாக அமைய வழி வகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையில் குறைவிருக்காது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் காலதாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விசயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பதால் தாராளமாக மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைத்து மகிழ்ச்சியை உண்டாக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்கள் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்தால் மன அமைதி காணலாம். மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாய்ப்புகள் தட்டிப் போக சாத்தியக்கூறுகள் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சோம்பலுடன் காணப்படுவீர்கள்.வாடிக்கையாளர்களை கவர்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கப்பெறும். கணவன் மனைவி புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமையப் போகின்றது. உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்திற்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பாராத புதிய நபர்களின் வருகையால் மாற்றங்கள் நிகழ சாத்தியக்கூறு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராட வேண்டிய நிலைமை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -