இன்றைய ராசி பலன் – 9-10-2020

rasi palan - 9-10-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வீண் விரயங்களை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. பெண்களுக்கு பணிச்சுமை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

- Advertisement -

மிதுனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா விதமான குழப்பங்களும் முடிவுக்கு வரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நன்மையில் முடியக்கூடும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் அதிக அலைச்சலை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரவு சரளமாக காணப்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளும் நீங்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான நாளாக இருக்கும். அதிகம் பேசிக் கொண்டிருந்த நீங்கள் இன்றைய நாளில் மவுனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. பேச்சை குறைத்துக் கொண்டு அதிகம் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டு.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் லட்சியங்கள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்க பெரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் சொல் கேட்டு நடப்பது மிகவும் நல்லது. பெண்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து மௌனம் காப்பதே சிறந்தது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கும் துணிவு கொண்ட உங்களுக்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி நட்பு வட்டம் விரிவடையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்த விஷயங்கள் வெற்றிகரமாக முடியும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி விடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். தொழில் வியாபாரம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கால தாமதம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த அன்னோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறு சிறு விஷயங்களில் கூட மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் குடும்பமே உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிலருக்கு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்து மறையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும் யோகம் உண்டாகும். வாகன வீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. சிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில்ரீதியான பயணங்களில் சாதகப் பலனை தரும். குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களின் சொல் கேட்டு மற்றவர்கள் நடந்து கொள்வார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். உங்களை ஏளனமாகப் பார்த்து அவர்கள் மத்தியில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வாகன வீதியான பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பெண்கள் நினைத்ததை தனக்கு சாதகமாக முடித்துக் கொள்வீர்கள். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் நிலை வரும். உத்தியோகத்தில் உங்களுக்கு இருக்கும் அதிகாரம் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை கண்ணியமாக நடத்துவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய தொழில் நுணுக்கங்களை கற்று கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் உண்டாகும். மனம் தளராத நீங்கள் உத்தியோகத்தில் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி விடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -