இன்றைய ராசி பலன் – 9-2-2020

rasi palan - 9-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான ஒரு நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகள் மூலம் லாபம் காண்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விளையாட்டு தனத்தில் உள்ள ஆர்வம் கல்வியிலும் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். சகோதர, சகோதரிகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பங்குச் சந்தை விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரலாம். உங்களுக்கு ஓய்வு தேவைப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் ஒரு நாளாக இருக்கும் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மனதில் அமைதி பிறக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டு. புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு தாமதம் ஏற்படும். தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறி குழப்பம் ஏற்படுத்துவார்கள். எனவே சுய முடிவு எடுப்பது நல்லது. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கட்டாயம் அமையும்.

கன்னி:
Kanni Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான ஒரு நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஆதாயம் தரும். சுயதொழில் புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். எனினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு ஏற்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் தென்படலாம். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்ப நபர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் உண்டு. கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற கரமான ஒரு நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபார விருத்தி உண்டாகப் பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியிடங்களுக்கு செல்வதனால் மன அமைதி கிட்டும். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலம் வெற்றி உண்டாகும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக நடக்கும். சுபகாரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகன வகையில் சில தேவையற்ற செலவுகள் வந்து சேரும். பெண்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். விநாயகப் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் எடுக்காமல் இருப்பது நலம் தரும். ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்வது நல்லது. கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபம் தரும். பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கான சூழ்நிலை உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதம் ஏற்படும். இதனால் வீண் அலைச்சல் உண்டாகலாம். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.