இன்றைய ராசி பலன் – 9-4-2020

rasi palan - 9-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமான ஒரு நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி பெற்றதாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்று வர வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். குடும்பத்தில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டி வரும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இனிய தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரணங்கள் சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த ஓய்வு நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பற்றாக்குறையை சிறப்பாக சரி செய்வீர்கள். கோவில் வீட்டில் உள்ள பெரியவர்கள் சந்தித்தல் குருமார்களை பார்த்தல் அவர்களுடைய ஆசிர்வாதம் பெறுதல் போன்றவை சிறப்பாக நடைபெறும். உடல் நன்றாக இருந்து வரும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த பொருளாதாரம் வரது உண்டு.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஒரு சிலர் தன்னுடைய மொபைல் போனை மாற்றுவார்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாகும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளித்து குடும்ப அமைதியை நிலைநாட்டுதல். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். பற்றாக்குறையை சமாளிக்க சிரமப்படுவீர்கள் என்றாலும் வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறையும் மன அழுத்தமும் உண்டாக வாய்ப்புண்டு. கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாகும் ஆகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். தாய்நாட்டைப் பற்றிய சிந்தனை கூடுதலாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். வெளிநாடு வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்கள் பல புதிய வழிகளைக் காண்பார்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலக்கை அடைவார்கள். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். சொத்துக்கள் விற்பனை தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சிந்தனை தோன்றும். ஆராய்ச்சிகளில் இருப்பார்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும் நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. அதிகப்படுத்திக் கொள்ளவும். மாற்றத்தை நோக்கி அவர்களை சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெற்றி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய வேலைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைத்தால் நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் உங்கள் காதல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கு உகந்த நாள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழியில் தென்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.