இன்றைய ராசி பலன் – 9-5-2020

rasi palan - 9-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். நண்பர்களுடன் எதையுமே வெளிப்படையாக பேச வேண்டாம். எந்த செயலை செய்வதற்கு முன்பும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் குணம் கொண்டவர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நிம்மதி ஏற்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சகோதரர்கள் நீங்கள் கேட்கும் உதவியை மறுக்காமல் செய்வார்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. தொழிலாளர்களின் தேவையை போட்டி செய்யுங்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணையால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் என்று விற்பனையும் அமோகமாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் யோகம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். வீண் விவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். எதிர்பார்த்த காரியங்கள் சுமுகமாக முடிவடையும். எந்தவித ஒப்பந்தங்களையும் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். தெய்வ வழிபாடுகள் மன நிம்மதி அளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. பேசும்பொழுது நிதானமாக இருப்பது மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். ஒரு சில வேளைகளில் உங்களுக்கு அலைச்சல்கள் ஏற்படுத்தும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சின்ன சின்ன தடைகள் ஏற்பட்டு நீங்கும். வேலை புரியும் இடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தாயின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணத்தை செலவு செய்வதில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சில பிரச்சனைகள் வந்து நீங்கும். உங்கள் தாயாரிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். காதல் போன்ற விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும். நண்பர்களுக்கு பணம் உதவி கொடுக்க வேண்டியிருக்கும். தந்தையிடம் மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் சுமாராக தான் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுமுகமாக முடியும். வியாபாரத்திற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்களால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். நீங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. உங்கள் சகோதரர்களால் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் தொழில் அமோகமாக இருக்கும். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாய் தந்தையின் ஆசீர்வாதத்தை பெறுவது மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கலாம். பணம் வரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பண உதவி உங்கள் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ் தரும் நாளாக இருக்கும். உங்களுக்கு பணம் தாமதமாக வரும். தாயாரின் உடல் நிலையில் இருப்பது மிகவும் நல்லது. எந்தவித முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியம் முடிவுக்கு வரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.