Rasi palan : இன்றைய ராசி பலன் – 01-01-2019

12-rasigal
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசினால் பிரச்னைகள் தீரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரிஷபம்:
Rishabam Rasi

காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

வெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
simmam

சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடம் நேரிடும்.

கன்னி:
Kanni Rasi

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவால் திடீர் யோகம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்:
virichigam

சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்:
Magaram rasi

சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
meenam

தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -