பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வைரஸ். திக்குமுக்காடும் விஞ்ஞானிகள்.

Coronavirus

கொரோனா வைரஸ்
சுமார் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் வசித்து வரும் சீன நாட்டின் மத்திய நகரமான வுஹான் என்கிற பகுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் என்கின்ற இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து கடந்த வருடத்தின் இறுதியில் கடுமையான காய்ச்சலினால் மருத்துவமனையை நாடிய ஒருவரை பரிசோதனை செய்ததில் இது கொரோனா வைரஸ் என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

Coronavirus1

இந்த கொரோனா வைரஸ் பாம்புகளிடம் தொற்றும் ஒருவித வைரஸ் என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு தகவலாகும். ஏனெனில் பாம்புகளிடம் இருந்து வைரஸ் மனிதனுக்கு இதுபோல் பரவுவது இதுவே முதல் முறையாகும். இதனால் மனிதனிலிருந்து மனிதனுக்கும் இந்நோய் வெகு விரைவாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. இதுவரை சீனாவில் இந்த வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை 17ஆக கூறப்பட்டுள்ளது. 600க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் என்று வி்ஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

சீன மட்டுமல்லாமல் ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளுக்கு செல்வதை முடிந்த வரை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

Coronavirus2

2002ஆம் ஆண்டு சீனாவில் வவ்வால் மூலம் மனிதனுக்கு பரவிய கொரோனா வைரஸ் மூலம் 700க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதே போல் 2012ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இந்த வைரஸ் குடும்பத்தை சார்ந்த நோய் தொற்று குதிரையிலிருந்து பரவி 800 பேர் வரை பலி கொண்டது குறிப்பிடதக்கது. கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் அதற்கான தடுப்பு முறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதே இந்த அச்சத்திற்கு காரணம்.

- Advertisement -

சீனாவின் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் வுஹான் நகரத்தில் கண்டறியபட்டதால் அங்குள்ள மிகப்பெரிய சந்தையான இறைச்சி கூடத்தை ஆய்வாளர்கள் சந்தேகித்துள்ளனர். சீனர்கள் ஆடு, கோழியை தவிர இன்ன பிற மாமிச உணவுகளை அதிகளவு உட்கொள்கின்றனர். எனவே அங்கிருந்து தான் இந்த வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்று கருதபடுகிறது.

Coronavirus3

கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO)விடுத்த எச்சரிக்கைக்கு பின் இந்தியாவில் விமான நிலையத்தில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பயணிகள் மீது கண்காணிப்பு தீவிரபடுத்தபட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியாவை சேர்ந்த 30 செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பரிசோதித்ததில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் அறிகுறிகளாக சீன சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்நோய் தாக்குபவர்களுக்கு கடும் காய்ச்சல் தொடங்கும். பின்னர் தொடர் இருமல் மற்றும் மூச்சு திணறல் உண்டாகக்கூடும். மனித செல்களை பாதிப்படைய செய்து பலவீனமாக்கி மற்ற நோய் தொற்றுகளையும் கொண்டு வந்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் மூலம் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் எளிதில் தொற்றிவிடும் அபாயம் உள்ளது. எனவே உலக மக்கள் சாதாரண காய்ச்சல் வந்தாலும் அலட்சியம் காட்டாமல் சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

English Overview:
Here we have Corona virus 2019 in Tamil. Corona virus in Tamil. Coronavirus in india. Coronavirus china. Coronavirus disease.