உளுந்து சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்

ulunthu-saatham
- Advertisement -

நாம் பல வகையான சாதங்களை சுவைத்து இருப்போம் . அதில் இடம்பெறாத ஒரு ஆனால் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு சாதம் தான் உளுந்து சாதம். மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உளுந்து சாதத்தினை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் உடல் வலு பெறும்.

ulunthu_1

உளுந்து சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

அரிசி – 2 கப்
துளி உளுந்து – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
பூண்டு -15 பல்
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

உளுந்து சாதம் செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு கடாயில் துளி உளுத்தம்பருப்பினை கொட்டி அத்தனையும் நன்றாக வருக்கவேண்டும் .

- Advertisement -

ulunthu_2

பிறகு, ஒரு குக்கரில் கழுவிய அரிசி அத்தானும் நாம் வறுத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை விடவும்.

ulunthu_3

4 விசில் முடிந்ததும் குக்கரை திறந்தால் சுவையான உளுந்து சாதம் தயார். இதனை ஒருமுறை நன்றாக கிளறி நீங்கள் சாப்பிட பரிமாறலாம்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
ரவா இட்லி செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ulunthu saatham recipe in Tamil. It is also called as Ulunthu saatham seimurai or Ulunthu saatham seivathu eppadi in Tamil.

- Advertisement -