மார்வாடிகள் பெரும் பணக்காரர்களாக, கஷ்டமில்லாமல் வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணம் தான். அந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

kadai

பெரும்பாலும் மார்வாடிகள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவினர், வடமாநிலத்தில் இருந்து நம் மாநிலத்திற்கு வந்து பணக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம். அவர்கள் நம்மை விட எப்போதுமே வசதி படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள். இதற்காக வட மாநிலத்தில் உள்ளவர்கள் யாரும் கஷ்டப்படுவதே இல்லை என்று சொல்ல வரவில்லை. வட மாநிலங்களிலும் கஷ்டப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு வறுமை என்பது அவ்வளவு அதிகமாக வாட்டி வதைக்கும் அளவிற்கு இருக்காது. அதற்கு என்ன காரணம்? வட மாநிலத்தவர்களுடைய செல்வ செழிப்பு பற்றிய சில ரகசியங்களை இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

money-1

பொதுவாகவே வட மாநிலத்தவர்களுக்கு ஒரு குணம் இயற்கையாகவே உண்டு. அதாவது அவர்களுடைய சமூகத்தில் இருப்பவர்கள் யாரேனும் கஷ்டப்பட்டாளாக இருந்தால், அவரை அப்படியே கைவிட மாட்டார்கள். 10 பேர் ஒன்றாக சேர்ந்து, கஷ்டப்பட்டு கொண்டிருப்பவரை கைதூக்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது மற்றவர்களை வாழ வைத்து தானும் வாழ வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கும். அந்த ஒரு எண்ணம் அவர்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி விடுகிறது. இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும், அவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் கஷ்ட பட மாட்டார்கள்.

அடுத்தபடியாக அவர்களுடைய வழிபாட்டு முறைகளும், அவர்கள் தங்களைச் சுற்றி அமைத்திருக்கும் சூழ்நிலையும் தான். வட மாநிலத்தவர்கள் எப்போதுமே அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்களும் அழகாகத்தான் அலங்காரம் செய்து கொள்வார்கள். அவர்கள் வீட்டையும் அழகாகத்தான் வைத்துக் கொள்வார்கள். பூஜையறையில் ஒரு தெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தாலும், அந்த அந்த சுவாமி படம் எப்போதுமே அலங்காரத்தோடு தான் வாசத்தோடு தான் இருக்கும். இந்தப் பழக்கமும் அவர்களிடம் இருக்கும்.

pooja-items

இதோடு சேர்த்து இன்னொரு முக்கியமான விஷயம். அவர்கள் பெரியவர்களை மிக மிக மதிப்பு கொடுத்த நடப்பார்கள். தங்களை விட பெரியவர்கள் தங்கள் வீட்டுக்கு வருகை தந்தாலேம் அல்லது இவர்கள் யாரையாவது சந்திக்கச் சென்றாலும், உடனடியாக பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த மரியாதை வறுமையில் இருந்து காப்பாற்றுகிறது.

- Advertisement -

இந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் வடமாநிலத்தவர்களிடத்தில் மட்டும்தான் உள்ளதா? ஏன் நம்மிடத்தில் இல்லையா? என்று சண்டைக்கு வரவேண்டாம். அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்மிடம் இந்த விஷயங்கள், இந்த குண நலன்கள் அனைத்தும் சற்று குறைவாகத்தான் உள்ளது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். நம்மிலும் சில பேர் உள்ளார்கள், பெருந்தன்மையோடு வாழ்பவர்கள். அவர்களை குறை சொல்வதற்கு எதுவுமே கிடையாது. தவறு செய்பவர்கள் திருத்திக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

pooja-items

வட மாநிலத்தவர்களது வாழ்க்கை இனிமையாக மாறுவதற்கு அவர்களுடைய வீட்டில் எப்போதுமே இனிப்பு பலகாரங்களை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் தான். இது கூடவாங்க ஒரு காரணமாய் இருக்கும் என்று அலட்சியமாக சிந்திக்காதீர்கள். நம் வீட்டிற்கு வருபவர்களை எப்போதுமே இனிப்பு கொடுத்து வரவேற்றோம் என்றால் நம்முடைய வாழ்க்கை இனிமையாக மாறும் என்பதும் கூட உண்மைதான்.

sweets

அந்த வரிசையில் அவர்கள் தினம்தோறும் மகா லட்சுமி தாயாருக்கு இனிப்பு சேர்த்த பால் அல்லது பாலினால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியமாக வைப்பார்கள். தினமும் காலை வேளையில் சுத்தமாக குளித்து விட்டு, காய்ச்சிய பாலில் கொஞ்சமாக இனிப்பு சேர்த்து, பச்சை கற்பூரம் சேர்த்து, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கலந்து மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்தாலே போதும். ஆண்டாண்டு காலத்திற்கும் நம்முடைய வாழ்க்கையில் வறுமை என்ற வார்த்தையை நாம் சந்திக்க வேண்டாம். அந்தப் பாலை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக குடித்து விடலாம்.

நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களோடு சேர்த்து மகாலட்சுமிக்கு இந்த ஒரு பிரசாதத்தை தினந்தோறும் நிவேதனமாக வைக்கலாம். முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி தினத்தன்றும் மகாலட்சுமிக்கு இந்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்து வரும் பட்சத்தில், நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.