குறுகியகால மகிழ்ச்சியை நம்பி வாழ்க்கையைத் தொலைக்காமல் இருக்க செய்யக்கூடாத தவறு என்ன தெரியுமா?

murugan-sad-rat

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அன்பு என்பது முக்கியமான ஒன்று தான் என்றாலும் அது குறுகிய கால விஷயமாக இருக்கும் பொழுது நம்மை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வலிமை வாய்ந்தது ஆகும். குறுகிய கால இன்பங்கள் எப்பொழுதும் யாருக்கும் நிரந்தரமில்லை. சுலபமாக கிடைக்கும் எதுவும் எப்பொழுதும் நிலைத்தது இல்லை. அது எதுவாக இருந்தாலும் சரி. இந்த கதையின் மூலம் 4 விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rat

ஒரு பெரிய தானிய ஜாடிக்குள் எலி ஒன்று மாட்டிக் கொண்டது. ஜாடி முழுவதும் தானியம் இருப்பதால் எலிக்கு தான் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற அக்கறை இல்லாமல் போய்விட்டது. இனி எப்பொழுதும் கஷ்டப்படாமல் உணவு கிடைக்கும் என்கிற உற்சாகத்துடன் அந்த ஜாடிக்குள்ளேயே இருக்க முடிவு செய்துவிட்டது.

ஜாடியில் இருக்கும் தானியங்களை தினமும் தன்னுடைய உணவாக எடுத்துக் கொண்டு வந்த எலிக்கு தானியம் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்கிற சிந்தனை வரவில்லை. சிறிது சிறிதாக தானியத்தை உண்டு மகிழ்ந்து வந்த எலி தானியம் தீர ஆரம்பித்ததும் யோசிக்க ஆரம்பித்து விட்டது ஆனால் ஜாடியில் தானியங்கள் தீர்ந்ததால் அடியில் சென்று விட்ட எலிக்கு ஜாடிக்குள் இருந்து வெளியில் வர முடியவில்லை.

rat0

தானியம் தீர்ந்ததும் எலியால் ஒன்றுமே செய்ய முடியாமல் நிரந்தரமாக ஜாடிக்குள் சிக்கியது. இனி அந்த ஜாடிக்குள் யாராவது தானியம் போட்டால் மட்டுமே எலியால் தப்பிப் பிழைக்க முடியும். அப்படி போட்டாலும் அதனால் விரும்பிய மட்டும் சாப்பிட முடியாது. அவர்கள் போடும் தானியத்தை மட்டுமே உண்டு வாழ முடியும். இதிலிருந்து வாழ்க்கைக்கு மிகவும் தேவையான 4 விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

1. கொஞ்ச காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் சந்தோஷத்தை நம்பி அதிக தூரம் பிரயாணம் செய்ய கூடாது. இது நம்மை புத்தி இழக்க அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். மனம் சொல்வதை கேட்டு நம் இஷ்டப்படி ஆடினால் நமக்கு துன்பம் வருவது தான் மிச்சம். ஆனால் புத்தி தவறு என்று ஒரு விஷயத்தை கூறும் பொழுது அதன் சொல்படி கேட்டு நடந்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும்.

sad-crying2

2. எளிதாகக் கிடைக்கும் எதையும் நம்பி நாம் சோம்பேறித்தனமாக இருந்து விட்டதால் பிறருக்கு அடிமையாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுவோம். நம்முடைய திறமைகளை முடுக்கி, முன்னேற்றத்தை தடுத்து, வாழ்க்கையையே சூனியமாக மாற்றிவிடும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்பதை முதலில் உணர வேண்டும்.

3. நமக்கு தெரிந்த விஷயங்களை நாம் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது நமக்கு மட்டும் தெரிந்தால் போதாது மற்றவர்களுக்கும் அதை கற்றுக் கொடுப்பதன் மூலம் நாம் கற்ற கல்வி, கலைகளை மறக்க முடியாது. மென்மேலும் நம் அறிவு வளர்ந்து, சிறப்பான முன்னேற்றத்தை காண முடியும். கற்ற கலைகளை மறந்துவிட்டு சோம்பலுடன் இருந்தால் நீங்கள் கற்ற அனைத்து விஷயங்களையும் இழந்து போய் விடுவீர்கள்.

sad-crying

4. குறிப்பிட்ட நேரத்தில் தான் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய முடியும். அந்த காலம் தவறினால் மீண்டும் நமக்கு கிடைக்காது. சரியான நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை சரியாக செய்து விட்டால் பிரச்சனை இல்லை! அப்படி இல்லாமல் போனால் உங்கள் வாழ்வை இழந்து தவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். இதனால் நீங்கள் விரும்பிய சில விஷயங்களை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாமல் போய்விடும்.