வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க வீட்டின் வரவேற்பறையில் இந்த 5 பொருட்கள் இருந்தால் போதுமே!

fish-peacock-cash

சம்பாதிப்பது ஒருபுறம் இருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்வது மற்றும் சேகரிப்பது என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். 100 ரூபாய் சம்பாதித்த காலத்திலும் அதே பற்றாக்குறை! லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் காலத்திலும் அதை பற்றாக்குறை தான்! இதற்கு ஒரே காரணம் உங்களுடைய ஆசை. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றும் புத்தர் கூறுகிறார். ஆசைப் படுவதில் தவறில்லை!

hall

ஆனால் அதற்கு ஏற்றார் போல் திட்டமிடலும் தேவை. வருவது வரட்டும்! அதற்கான திட்டமிடலை சரியாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் திடீரென மருத்துவ செலவுக்கு வீண் விரயமாகும். அது போல எண்ணற்ற செலவுகள் நம் கண் முன்னே நமக்கு தெரியாமல் வந்து கரைந்து கொண்டே இருக்கும். இப்படியான வீண் செலவுகளை குறைக்க நம் வீட்டின் வரவேற்பறை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை படியுங்கள்.

நம் வீட்டின் வரவேற்பறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மற்ற அறைகளை காட்டிலும் வரவேற்பறை மிகவும் முக்கியமானது. வெளிநபர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவருமே முதலில் வரவேற்பறையை தான் பார்ப்பார்கள். அதற்குப் பிறகு தான் மற்ற அறைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆகவே வரவேற்பறையை கூடுமானவரை தினமும் ஒருமுறை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

fish

மகாலட்சுமி வாசம் நிறைந்த இடங்களில் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. எப்பொழுதும் வரவேற்பறையின் நடுப்பகுதியில் எந்த ஒரு பொருட்களையும் வைக்கக்கூடாது, மிகவும் வாசனையாக வைத்திருக்க வேண்டும். வரவேற்பறையின் வட கிழக்கு மூலையில் ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் ஏலக்காய், சோம்பு, கிராம்பு, பச்சைக் கற்பூரம், பட்டை, ஜவ்வாது போன்ற தெய்வீக வாசனை பொருட்களை போட்டு வைக்க வேண்டும். இதில் உங்களிடம் என்ன இருக்கிறதோ! அதை மட்டும் போட்டால் போதும். அந்த அதிர்வலைகள் வீடு முழுவதும் பரவி எதிர்மறை ஆற்றல்களை விலக்கிவிடும்.

மேலும் வீட்டின் வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் அழகிய வண்ண மீன்கள் வளர்ப்பது நல்லது. எப்பொழுதும் மீன் தொட்டி வீட்டில் இருப்பது அதிர்ஷ்டத்தை தரும். தொட்டியில் ஆரஞ்சு, வெள்ளை நிற மீன்கள் இருப்பது பேரஷ்டத்தை கொடுக்கும். கண்ணாடி சுக்கிரனின் அம்சமாக இருப்பதால் கனமான கண்ணாடி பொருட்களை வரவேற்பறையில் அலங்கரிப்பது சுக்கிர யோகத்தை கொடுக்கும். முருகனின் அம்சமாக இருக்கும் மயில் தோகை வரவேற்பறையில் அலங்காரத்திற்கு தாராளமாக வைத்துக் கொள்ளலாம். மயில் தோகை இருந்தால் அந்த இடத்தில் பல்லிகள் தொந்தரவும் இருக்காது. மேலும் மயில் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை வெளியேற்றும். நீங்கள் தீய வழியில் செல்ல நினைத்தாலும் அதனை தடுக்கும் அம்சம் மயில் தோகை உண்டு.

mayilaragu

வீட்டிற்குள் வளர்க்கும் செடி வகைகளில் பர்புல்(purple) நிறம் கொண்ட செடிகள் வளர்ப்பது, பிங்க் நிற செடிகள் வளர்ப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வரவேற்பறையில் எப்பொழுதும் ஒரு செடியாவது நீங்கள் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும். வீண் விரயங்களை தடுப்பதற்கு இப்பொருள்கள் அனைத்தும் உதவி செய்யும். மேலும் பணம் சேர்க்கும் உண்டியல் வரவேற்பறையில் வடக்கு திசையை பார்த்து வைத்திருப்பது பணவரவை அதிகரிக்க செய்யும். நீங்கள் வாங்கும் உண்டியல் குபேரன், பன்றி, யானை போன்ற உருவங்களை கொண்டிருப்பது வீண் விரயங்களை தடுத்து பணவரவை அதிகரிக்க செய்யும்.