வெள்ளிக்கிழமையில் இதை கொண்டு தூபம் போட்டால் வீட்டில் இருக்கும் தரித்திரம் தலைதெறிக்க வெளியே ஓடிவிடும்.

thoopam

நம் நாட்டைப் பொறுத்தவரை வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜை செய்வது என்பது வழக்கமான ஒன்று தான். அப்படி பூஜை செய்கின்ற பொழுது சாம்பிராணி போட்டு தீபம் இடுவதால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிலிருந்து நீங்கும் என்பது பன்னெடுங்காலமாக பெண்கள் கடைபிடிக்கின்ற ஒரு ஆன்மீக நடைமுறை மற்றும் நம்பிக்கையாகயாகும். அப்படி பெண்கள் தூபம் போடும் சமயத்தில் என்னென்ன பொருட்களை கொண்டு தூபம்போடுவதால் எத்தகைய பலன்களை பெறலாம் என்பது குறித்து இங்கே நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

poojai

சந்தனப் பொடியை தூபத்தில் போட்டு வீடு முழுவதும் புகை போடுவதால் தெய்வங்களின் அருட்கடாட்சம் உண்டாகும். இந்த சந்தன பொடி தங்கள் கைகளாலேயே சந்தனக்கட்டையை அரைத்தெடுத்த பொடியாக இருப்பது சாலச் சிறந்தது. தூதுவளை பல்வேறு நோய்களை போக்கும் ஒரு அற்புத மூலிகையாகும். இந்த தூதுவளை இலையை சாம்பிராணி தூபத்தில் சேர்த்து வீடு முழுவதும் தூபமிடுதால் என்றென்றும் அந்த வீட்டில் தெய்வீக சக்திகள் நிலையாக தங்கி இருக்கும்.

நாம் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது, அதில் சிறிதளவு ஜவ்வாது பொடியை சேர்த்து தூபம் போடுவதால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படச் செய்யும்.  அகில் எனப்படும் மரம் மிகச்சிறந்த வாசனையை வெளிப்படுத்தும் வகையைச் சேர்ந்ததாகும். இந்த அகில் மரத்தின் சிறிய கட்டை துண்டுகளை நீங்கள் வீட்டில் தூபம் போடும் போது சாம்பிராணி புகையில் போட்டு தூபமிடுவதால் திருமணமாகியும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும்.

thulasi-theertham

சாம்பிராணி தூபத்தில் துளசி இலைகளை சிறிதளவு போட்டு தூபம் போடுவதால் நீண்டகாலமாக இருக்கின்ற திருமணத் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கி வீட்டில் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்.

- Advertisement -

தற்போது வெள்ளை குங்கிலியம் பூஜை பொருட்கள் விற்கின்ற நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. இந்த வெள்ளை குங்கிலியத்தை வாங்கி சாம்பிராணியுடன் சேர்த்து தூபமிடுவதால் வீட்டில் புகுந்திருக்கும் துஷ்ட ஆவிகள் வீட்டை விட்டு நொடிப்பொழுதில் வெளியேறும். சிறிதளவு வெண்கடுகுகளை சாம்பிராணி தூபத்தில் சேர்த்து வீடு முழுவதும் தூபம் போடுபவர்களுக்கு அவர்களின் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். அந்த எதிரிகளால் ஏற்படும் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கி வெற்றி உண்டாகும்.

venkadugu

வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுவதும் சாம்பிராணி தூபமிடும்பொழுது மருதாணி செடியின் மருதாணி விதைகளை அதில் சேர்த்து வீடு முழுவதும் அந்த சாம்பிராணி புகையை பரவச் செய்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட ஏவல், செய்வினை போன்ற மாந்திரீக கட்டுகள் நீங்கி, உடல் மற்றும் மனநலம் மேம்படும். குடும்பம் பொருளாதார நிலை சீராகும்.

neem-tree

பல்வேறு தெய்வீக ஆற்றல்களை தன்னுள்ளே கொண்ட ஒரு அற்புத மரமாக வேப்பமரம் திகழ்கிறது. இந்த வேப்ப மரத்தின் பட்டையை உரித்து, உங்கள் வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் போது சேர்த்து தூபம் போடுவதால் வீட்டில் இருக்கின்ற பீடைகள், தரித்திர நிலை போன்றவை நீங்கும். துரதிர்ஷ்டங்கள் ஏற்படாமல் காக்கும். சித்தர்களால் மிகவும் போற்றப்படும் ஒரு மூலிகையாக கரிசலாங்கண்ணி இருக்கிறது. இந்த கரிசலாங்கண்ணி தாவரத்தின் இலைகளை பறித்து சாம்பிராணி தூபம் தொடர்ந்து போட்டு வருவதால் சித்தர்கள், மகான்கள் போன்றவர்களின் ஆசிகள் வீட்டில் உள்ளவர்களுக்கு என்றென்றும் கிடைத்து, அதன் காரணமாக பல நன்மைகள் உண்டாகும்.