எத்தனை நாட்கள் தான் கோடீஸ்வர வாழ்க்கையை கனவிலேயே வாழ்வது? கனவில் கண்ட பல கோடிகளை, நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்த இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டாலே போதும்.

vetrilai-cash

நிறைய பேருக்கு கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த கனவை நினைவாக்கவது எப்படி என்ற வழி தெரியாது? கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு இருப்பவர்கள் விடாமுயற்சியுடன் செயல் படவேண்டும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் சேர்ந்தாலே போதும், நிச்சயமாக ஒருநாள் இல்லை என்றாலும் ஒரு நாள் கோடீஸ்வரர் யோகத்தை பெற்றுவிடலாம். என்னதான் கடின உழைப்பு இருந்தாலும், அதிர்ஷ்டமும் கொஞ்சம் நம் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டும். இதற்கு தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம். ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash-question

கண்மூடித்தனமாக இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டாம். ஐந்து நாட்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக நீங்கள் மனதார உணர்ந்தால் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் செய்து பலன் பெறலாம். நல்ல மாற்றங்கள் ஏற்படவில்லை, பரிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பவர்கள் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இந்த பரிகாரத்தை கட்டாயம் அதிகாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் வெற்றிலை, தேன், மிளகு. இளசாக இருக்கும் ஒரு வெற்றிலையின் மேல் காம்பை நீக்கிவிட்டு, தேனை தடவி கொள்ள வேண்டும். அதற்கு நடுவே 3 மிளகை வைத்து, வெற்றிலையைச் சுருட்டி வாய்க்குள் போட்டு, முடிந்தால் அப்படியே மென்று விழுங்கி விடலாம். முடியாதவர்கள் நன்றாக மென்று இதன் சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். திப்பியை வெளியே துப்பி விடலாம்.

honey 3

இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த கலவையை அந்த வீட்டின் குடும்பத் தலைவர் சாப்பிட வேண்டும். பூஜை அறையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு தினமும் அதிகாலையில் குளித்து முடித்து விட்டு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் அடிக்கத் தொடங்கும்.

துரதிர்ஷ்டம் உங்கள் அருகில் வர பயப்பட்டு நடுங்கும். நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அதில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சில பேருக்கு சில விஷயங்கள் அதிர்ஷ்டம் கொடுக்கும். சில விஷயங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்காது. எடுத்துக்காட்டிற்கு புதியதாக ஒரு தொழிலை தொடங்கி இருப்பார்கள். புதியதாக ஒரு வீட்டை வாங்கி இருப்பார்கள். புதியதாக ஒரு வண்டி வாகனம் வாங்கி இருப்பார்கள். புதியதாக ஒரு வீட்டிற்கு குடி சென்றிருப்பார்கள். புதியதாக தொடங்கிய ஒரு காரியம் அவர்களிடம் இருந்த அதிர்ஷ்டத்தை விளக்கி இருக்கும்.

Milagu benefits in Tamil

இப்படியாக இருந்த அதிர்ஷ்டத்தை இழந்தவர்கள், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், மீண்டும் அதிர்ஷ்ட காரர்களாக மாறுவதற்கும் நிறையவே வாய்ப்பு உள்ளது. நிறையப் பேருக்கு எடுத்த காரியத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் ஒரு படி காலை எடுத்து வைத்தால், பத்து படி கீழே பாதாளத்தில் தள்ளிவிடும். இப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலிகள் கூட அதிர்ஷ்டசாலியாக மாறுவதற்கு இந்த பரிகாரம் கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.