குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

kula-dheivam1

இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் தங்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஜாதகத்தில் உள்ள சில தோஷத்திற்கு காரணம் குலதெய்வ வழிபடு இல்லை என்று ஜோதிடர் சொல்லும்போது தான் குலதெய்வத்தை பற்றிய தேடலை சிலர் துவங்குகின்றனர். குலதெய்வத்தை மிஞ்சிய ஒரு தெய்வம் வேறில்லை என்பது மஹான்களின் வாக்கு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உங்கள் தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் எப்படி அழைப்பது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

kula dheivam

மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் பித்தளை அல்லது செப்பு ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.

வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள்வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும்.

மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது.பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.கலசத்தில் உள்ளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்

kula dheivam

- Advertisement -

பூஜைக்குறிய மந்திரம்:

ஓம் பவாய நம
ஓம் சர்வாய நம
ஓம்ருத்ராய நம
ஓம் பசுபதே நம
ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம
ஓம் பீமாய நம
ஓம்ஈசாய நம

தினமும் 11 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனை தீர வேண்டுமா? அப்படியானால் இங்கு செல்லுங்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we discussed how to make Kula deivam to come to home in Tamil. It can be said as Kula deivam veetil vara tips in Tamil.