சிவனை மட்டும் வழிபட்டால் பலன் கிடையாது இவரையும் வழிபடவேண்டும்.

0
571
Sivan God
- விளம்பரம் -

சிலர் என்னதான் கோவில் குளம் என்று சுற்றினாலும் நல்லது நடப்பதே இல்லை என்று புலம்புவதை நாம் பார்த்திருப்போம். அதற்கு காரணம் தெய்வத்தை முறையாக வணங்காததே. உதாரணத்திற்கு சிவன் கோயிலிற்கு சென்று சிவனை மட்டும் வணங்கி வந்தால் அருள் கிடைப்பது கடினம்.

சிவன் கோவிலிற்கு சென்றால் சண்டிகேசரை வணங்குவது அவசியம். சிவனடியார்களில் முதன்மையானவர் என்று கருதப்படும் சண்டிகேசர், சிவபூஜையில் இடையூறு செய்ததால் தன் தந்தையின் காலையே துண்டித்தவர்.

Advertisement

இவரது பக்தியை கண்டு மனம் மகிழ்ந்த சிவ பெருமான், தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் போன்றவை சண்டிகேசருக்கே தினமும் வழங்கப்படும் என அருள்பாலித்தார். அதே போல் கோவிலிற்கு வந்து சிவனை வேண்டுபவர்களின் பக்திக்கு ஏற்றவாறு பலன் அளிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆகையால் இவரை வணங்குவது மிக மிக அவசியம்.

சண்டிகேசரை வணங்கும் முறை:
சிவன் கோவிலில் உள்ள சண்டிகேசரின் சன்னதியை அடைந்ததும் சிலர் கை தட்டி வணங்குவர். சிலர் பவ்யமாக கை கூப்பி வணங்குவர். சண்டிகேசர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். நாம் கைகளை தட்டி அவரது தியானத்தை கலைப்பதென்பது முறையான செயல் ஆகாது. ஆகையால் அமைதியாக அவரை வேண்டினால் மட்டுமே நமக்கு பலன் உண்டு.

Advertisement