இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும் எனினும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

மேஷம்

இந்த நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் கூடுதல் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்

இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த மன கசப்புகள் தீரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும். 

மிதுனம்

இந்த நாள் தொலை தூரப் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தட்டிச்சென்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். 

கடகம்

இந்த நாள் நீங்கள் நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் எதிர்பாராத நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. 

சிம்மம்

இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமையில் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழில் விரிவாக்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். 

கன்னி

இந்த நாள் துடிப்புடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.  கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உத்யோகஸ்தர்கள் எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.

துலாம்

இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்

எதிர்பாராத வகையில் எதிர்ப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். வெளியிடங்களில் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும், வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவீர்கள். 

தனுசு

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்களை தவிர்ப்பது நல்லது. சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையான இடங்களில் மௌனம் காப்பது உத்தமம். உத்யோகஸ்தர்கள் தங்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த பகைமையை விலக்கிக் கொள்வீர்கள்.

மகரம்

குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய நினைவுகள் வந்து செல்லும். கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனுகூல பலன் தரும். 

கும்பம்

இந்த நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. 

மீனம்