தேவையான பொருட்கள்

1) கொத்தமல்லி – ஒரு கைப்பிடி 2) தக்காளி – 2 3) இஞ்சி – ஒரு சிறு துண்டு 4) வர மிளகாய் – 3 5) புளி – சிறு நெல்லிக்காய் அளவு  6) உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்  7) கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன். 8) பெரிய வெங்காயம் – 2

செய்முறை

முதலில் கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து மெல்லிய தண்டுகளுடன் கூடிய இலைகளை மட்டும் எடுத்து ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவற்றை சுத்தம் செய்து தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் நீக்கி ஒரு சிறு புளி கொட்டை அளவிற்கு எடுத்துக் கொண்டால் போதும். இஞ்சியை அதிகம் சேர்த்தால் இஞ்சி வாசனை சட்னியை கெடுத்துவிடும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகிய பருப்புகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

இவை நன்கு பொன்னிறமாக வறுபட்டதும், காய்ந்த மிளகாய், புளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதம் வரை நன்கு வதங்கி வரும் பொழுது தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

கடைசியாக எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை போட்டு ஒருமுறை பிரட்டி விடுங்கள்.

வெங்காயம், தக்காளி அனைத்தும் மசிய வதங்கி வந்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து இதனை அவற்றுடன் சேர்த்து நன்கு நைசாக அரைக்காமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தாளிக்க ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் சிறிதளவு உளுத்தம் பருப்பு, சிறிதளவு சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்து சட்னியுடன் போட்டு இறக்கினால் அற்புதமான சுவையுள்ள கொத்தமல்லி தக்காளி சட்னி ரெடி!