12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ

Rasi Pariharam

மேஷம்:
Mesham Rasi

செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பானதாக அமைய புதன்கிழமை அன்று காலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு தீபமேற்றி, விநாயகர் அகவல் விநாயகர் காயத்ரி மந்திரங்கள் துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிகாரர்கள் இந்த வாரம் முழுவதும் நன்மையான பலன்களை பெற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு தீபமேற்றி, சண்முக கவசம் மற்றும் முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசியினர் இந்த வாரம் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாள் கோவிலுக்கோ சென்று பெருமாளுக்கு நெய் தீபமேற்றி, துளசி மாலை சாற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பெருமாள் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவது நன்மைகளை உண்டாக்கும்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசியினர் இந்த வாரம் வெள்ளி மற்றும் திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கும் அம்பாள் கோயிலுக்கு சென்று, அம்பாளுக்கு வாசமுள்ள மலர்கள் சமர்ப்பித்து, விளக்கேற்றி அம்பாள் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்திலும் விடயங்களிலும் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசியினர் இந்த வாரம் முழுவதும் அனைத்திலும் நன்மையான பலன்களை பெற தினந்தோறும் காலையில் வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமான் படத்திற்கு முன்பு நல்லெண்ணை தீபம் ஏற்றி, விநாயகருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறலாம்.

கன்னி:
Kanni Rasi

புதன் பகவானின் ஆதிக்கத்தில் இருக்கின்ற கன்னி ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் நன்மையான பலன்கள் ஏற்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் லலிதாம்பிகை தேவிக்கு தீபமேற்றி, அம்பிகை மந்திரங்கள் துதித்து வழிபட்டு வருவதால் நற்பலன்கள் அதிகம் பெறலாம்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசியினர் இந்த வாரம் முழுவதும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று, சிவனுக்கு நெய் தீபமேற்றி சிவ மந்திரங்கள் துதித்து வழிபட்டு வருவதால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும்.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசியினர் இந்த வாரம் முழுவதும் நன்மையான பலன்களை பெற தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு முருகப்பெருமானின் படத்திற்கு மலர்கள் சாற்றி, தீபமேற்றி முருக மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெற முடியும்.

தனுசு:
Dhanusu Rasi

குரு பகவானின் ஆதிக்கத்திற்குரிய தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் வருகிற வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு 27 கொண்டைகடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி குரு பகவான் மந்திரம் மற்றும் தட்சிணாமூர்த்தி மந்திரம் துதித்து வருவதால் அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளைப் பெறும்.

மகரம்:
Magaram rasi

செவ்வாய் பகவானின் உச்ச ராசியான மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு தினத்தில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்க பெறுவார்கள்.

கும்பம்:
Kumbam Rasi

சனி பகவானுக்குரிய கும்ப ராசியில் பிறந்தவர்கள் விரும்பிய நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெற சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலில், துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி, துர்க்கை அம்மன் காயத்ரி மந்திரங்களை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
meenam

இந்த வார காலம் முழுவதும் அனைத்து இடம் சிறப்பான பலன்களைப் பெற மீன ராசியினர் வீட்டின் பூஜை அறையில் ரங்கநாத பெருமாள் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி பெருமாள் மந்திரங்களைத் துதித்து வழிபாடு செய்வதால் அனைத்திலும் வேண்டிய பலன் கிடைக்கப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
ஜோதிடப்படி யாருக்கெல்லாம் ராஜயோகம் அமையும்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Weekly jothida pariharam in Tamil. It is also called as Parigarangal in Tamil.