மேஷம்:
செவ்வாய் பகவானுக்குரிய மேஷ ராசியினருக்கு இந்த வாரத்தில் அனைத்திலும் நன்மையான பலன்கள் உண்டாக, வெள்ளிக்கிழமை தினத்தன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடவேண்டும்.
ரிஷபம்:
சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்து விடயங்களிலும் நன்மைகளும், காரிய வெற்றிகளும் உண்டாக வியாழக்கிழமை தினத்தன்று காலையில் நவக்கிரகத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
மிதுனம்:
புதனுக்குரிய மிதுன ராசியினருக்கு இந்த ஒரு வார காலத்தில் அனைத்து விடயங்களிலும் நன்மையான பலன்கள் ஏற்பட தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று பழம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, கற்பூரம் ஏற்றி வழிபடுவது நன்மைகள் உண்டாக்கும்.
கடகம்:
சந்திர பகவானுக்குரிய கடக ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் எடுத்த காரியங்களில் வெற்றியும், அனைத்து விடயங்களில் நன்மைகளும் ஏற்பட, வாரத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பெருமாளை வழிபட்டு வர வேண்டும்.
சிம்மம்:
சூரிய பகவானுக்குரிய சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஒரு வார காலம் முழுவதும் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும், சிறப்பான பலன்கள் கிடைக்க மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படவும் வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கன்னி:
இந்த வாரம் முழுவதும் புதன் பகவானின் ராசிகளில் ஒன்றான கன்னி ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் எல்லா விடயங்களிலும் வெற்றியுண்டாக புதன் கிழமையில் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
துலாம்:
சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசியினர் மிகுதியான தன லாபங்கள் பெறவும், அனைத்து காரியங்களில் சிறப்பான வெற்றிகள் கிடைக்கவும் வெள்ளிக்கிழமை அன்று காலை மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை உளமார படிப்பதால் விரும்பிய பலனைப் பெறலாம்.
விருச்சிகம்:
செவ்வாயின் அருள் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு இந்த வார காலத்தில் அதிக நன்மைகளும், சிறப்பான லாபங்களும் உண்டாக செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் நன்மையான பலன்களையும், அனைத்து காரியங்களிலும் சிறப்பான வெற்றிகளையும், லாபங்களையும் பெறுவதற்கு சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மகரம்:
செவ்வாய் பகவான் உச்சம் அடையும் ராசியான மகர ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் எல்லா விடயங்களில் நன்மைகளைப் பெறவும், பொருளாதார லாபங்களை அடையவும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் ராகு காலத்தில் பைரவரை வழிபடுவது நன்மையை தரும்.
கும்பம்:
சனி பகவானுக்குரிய கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பான பலன்களை பெறவும், காரிய வெற்றிகள் மற்றும் பொருளாதார லாபங்கள் உண்டாகவும் சிவபெருமானுக்கு தீபமேற்றி வழிபடுவது நன்மைகளை உண்டாக்கும்.
மீனம்:
குரு பகவானுக்குரிய மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பான நன்மைகளை பெறவும், பொருளாதார லாபங்கள் உண்டாகவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும், தினமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியை வழிபட்டு வர வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மேஷ லக்னத்தார்கள் அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டியவை
இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
English overview:
Here we have Weekly jothida pariharam in Tamil. It is also called as Parigarangal in Tamil.