12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்களும் அதற்கான பலன்களும்

raasi-palanl
- Advertisement -

தர்மம் தலை காக்கும் என்பதை சான்றோர்களின் வாக்கும். ஆகையால் நீங்கள் எந்த அளவிற்கு தானம் செய்கிறீர்களோ அதன் அளவிற்கு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். ஜாதக ரீதியாக ஒரு ராசிக்காரர் எந்த வகையான தானம் செய்தால் அவரின் வாழ்க்கை எளிதில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் என்பதை இந்த பதிவில் நாம் பாப்போம் வாருங்கள்.

மேஷம்:

- Advertisement -

வெற்றி நோக்குடன் செயலாற்றும் மேஷ ராசி நண்பர்களே, நீங்கள் சிவன் கோவிலில் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு தானம் அளிக்கவேண்டும் அதோடு உங்களுடைய குலதெய்வ கோயிலிற்கு சென்று வருடாவருடம் தவறாமல் வழிபாடு செய்யவேண்டும். மேலும் உடல் ஊனமுற்றோர்களுக்கு தேவையான பொருட்களை தானம் அளிக்க வேண்டும். இதை செய்து வந்தால் உங்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

சாதனை படைக்கும் மனம் படைத்த ரிஷப ராசி நண்பர்களே, நீங்கள் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலும் செவ்வாய்கிக் கிழமைகளில் ஏழை எளியோருக்கு சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு செல்வம் பெருகும், வாழ்வில் உள்ள அணைத்து தடைகளும் நீங்கும்.

மிதுனம்:

- Advertisement -

முற்போக்கு எண்ணமுடன் செயல்படும் மிதுன ராசி நண்பர்களே, நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும். மேலும் பணமில்லாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக பண உதவி செய்யுங்கள். அதோடு புதன்கிழமைகளில் பெருமாளை வணங்கிவிட்டு உங்களால் முடிந்தவரை வெண்பொங்கலை தானமாக கொடுங்கள். இதனால் எல்லாவித செல்வமும் உங்களை தேடி வரும்.

கடகம்:

பிறரின் அன்பிற்கு கட்டுப்படும் கடக ராசி நண்பர்களே, நீங்கள் ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்யலாம் அதோடு பசுவிற்கு வாழைப்பழம் கொடுப்பது அகத்தி கீரை கொடுப்பது போன்றவற்றை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் செல்வம் சேரும் அதோடு உங்களுக்கு நிம்மதியான வாழ்கை கிடைக்கும்.

சிம்மம்:

செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் சிம்ம ராசி நண்பர்களே, நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும். மேலும் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி:

நம்பகத்தன்மை கொண்ட கன்னி ராசி நண்பர்களே நீங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது இனிப்பு மற்றும் உணவு
பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் வியாழக்கிழமை தோறும் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். ஏழை எளிய மாணவர்களின் படிப்பு செலவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இதனால் உங்கள் வாழ்கை முன்னேற்றப்பாதையை நோக்கி செல்லும்.

துலாம்:

சிறந்த நண்பர்களையும் நல்ல உறவுகளையும் பெற்ற துலாம் ராசி நண்பர்களே நீங்கள் அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள் மேலும் அனாதை ஆசிரமத்தில் உள்ள மாணவர்களின் படிப்பு செல்வத்திற்கு உதவுங்கள் இது உங்கள் வாரிசுகளை காக்கும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு சிறந்த முறையில் கை கொடுக்கும்.

விருச்சகம்:

சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் விருச்சக ராசி நண்பர்களே நீங்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் உங்கள் கடன் பிரச்சனை தீரும். மேலும் அம்மன் கோயிலிற்கு சென்று அங்குள்ள பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:

குறிக்கோளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடும் தனுசு ராசி நண்பர்களே நீங்கள் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது. நீங்கள் தினம் தோறும் முருகனை வழிபட வேண்டும்.

மகரம்:

செல்வாக்கோடும் சுய கௌரவத்தோடும் வாழ நினைக்கும் மகர ராசி நண்பர்களே நீங்கள் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை கொடுக்கவேண்டும். உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவலாம். மேலும் கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது உங்களால் முடிந்தவரை அதற்கு தேவையான பொருட்களை தானமாக வழங்கினால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

கும்பம்:

எந்த நிலையிலும் எவருடைய தயவும் எதிர்பார்க்காமல் சுயமாக வாழ விரும்பும் கும்ப ராசி நண்பர்களே நீங்கள் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்க பணம் தரலாம். ஏழை எளிய மக்களுக்கு அடிக்கடி கதம்ப உணவை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் குலதெய்வ வழிப்பாட்டை வருந்தந்தோறும் மறக்காமல் செய்ய வேண்டும். இதை எல்லாம் செய்வதனால் உங்கள் வாழ்கை வலமாக அமையும்.

மீனம்:

ரகசியங்களை பாதுகாப்பதில் வல்லவரான மீன ராசி நண்பர்களே நீங்கள் அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் நன்மை பிறகும். மேலும் பவுர்ணமி நாட்களில் சிவாலயம் சென்றும் சிவனை தரிசிப்பது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்தால் புண்ணியம் அதிகரிக்கும் மேலும் நீங்கள் நல்லெண்ணை தீப தானம் செய்யலாம்.

- Advertisement -