எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்.

dheivam

இந்து மதத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. எல்லா தெய்வங்களும் சக்தி வாய்ந்தவைதான் என்றாலும் கூட ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருந்து குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கனால் நமக்கும் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்காக காரணமும் இதுவே. சரி எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன பலன் என்பதை நாம் இப்போது விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

 • மனவலிமை மற்றும் உடல் வலிமை பெற – ஆஞ்சநேயர், ஸ்ரீராஜராஜேஸ்வரி.
 • திருமணம் நல்லமுறையில் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மன்.
 • தொழிலில் லாபம் பெறுக – திருப்பதி வெங்கடாசலபதி.
 • பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன்.

 • பில்லி சூனியம் விலக – ஸ்ரீ நரசிம்மர், காளி அம்மன்.
 • நிலம் மற்றும் வீடு வாங்க – ஸ்ரீசுப்ரமண்யர், செவ்வாய் பகவான்.
 • நோயில் இருந்து விடுபட – ஸ்ரீதன்வந்தரி, தட்சிணா மூர்த்தி.
 • விவசாயம் தழைக்க – ஸ்ரீதான்யலட்சுமி.
 • புத்திர பாக்கியம் பெற – சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணன்.
 • செல்வம் பெறுக – மகாலக்ஷ்மி, ஸ்ரீநாராயணர்.
 • சனி தோஷம் நீங்க – ஐயப்பன், ஆஞ்சநேயர்.
 • கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீசரஸ்வதி.
 • இடையூறுகள் நீங்க – விநாயகர்.
 • புதியதாய் தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி.
 • வழக்குகளில் வெற்றி பெற – விநாயகர்.
 • உணவுக் பிரச்சனை நீங்க – ஸ்ரீஅன்னபூரணி.
 • அழியாச் செல்வம் பெற – சிவஸ்துதி.