கொரோனா பிரச்சனையால் மகளைப் பிரிந்த தாய்! 20 நாட்கள் பாசப் போராட்டத்திற்கு பிறகு நடந்தது என்ன?

mom
- Advertisement -

கொரானா வைரஸால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களும் ஒரு புறம் வாழ்வதற்க்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, வைரசை தடுப்பதற்காக தங்களுடைய குடும்பங்களை எல்லாம் விட்டு போராடிக் கொண்டிருப்பவர்களின் கஷ்டத்தையும் ஒருபுறம் பார்க்க வேண்டிய சூழ்நிலை. இந்த வரிசையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி கொண்டிருக்கும் சுகந்தாவின் சோகக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. தன்னுடைய 3 வயது குழந்தையை பிரிந்த, ஒரு செவிலித் தாய் அனுபவித்த சோகம், சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த பாச போராட்டத்திற்கான தீர்வு நேற்றுமுன் தினம் தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தாயும் சேயும் ஒன்று சேர்ந்த அந்த தருணத்தை இந்த பதிவின் மூலம் விரிவாக நாமும் காணலாம்.

belakavi-nurse1

கர்நாடக மாநிலம் பெலக்காவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் சுகந்தா. இவர் கொனரோனா சிகிச்சை தனிப்பிரிவு வார்டில் நர்சாக வேலை செய்து வருகின்றார். இதனால் இவர், மருத்துவமனையில் தனக்காக கொடுக்கப்பட்டுள்ள தனியார் விடுதியில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற செவிலியர்களும் இவரைப் போலவே, தனி அறையில் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு, தங்களுடைய சேவையை செய்து வந்தார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சுகந்தாவால் வீட்டிற்குச் சென்று தன்னுடைய குழந்தையை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வீட்டிற்கு சென்றால் தன்னுடைய 3 வயது குழந்தைக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் சுதாவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்த சுகந்தா வின் குழந்தை தாயை காணவேண்டும் என்று அடம்பிடித்து அழுததால், சுதாவின் கணவர், தன்னுடைய குழந்தையை சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துவந்து காண்பித்தார்.

karnataka_news2

ஆனால் தாயும் குழந்தையும் 10 அடி தள்ளி நின்று தான் காண முடிந்ததே தவிர, பாவம் அந்த குழந்தையால் தன்னுடைய தாயை கட்டித்தழுவ முடியவில்லை. அந்த குழந்தை தன்னுடைய அம்மாவின் அருகில் செல்ல வேண்டும் என்று அழுது அடம் பிடித்து கலங்கிய காட்சி, இன்றும் பார்த்தவர்கள் கண்களில் அப்படியே இருக்கிறது என்று சொன்னால் அது பொய்யாகாது.

- Advertisement -

இந்த தாய்க்கும் சேய்க்கும் நடந்த பாசப்போராட்டம் 20 நாட்களுக்குப் பின்பு நேற்றைய முன்தினம் சனிக்கிழமை தான், ஒரு முடிவுக்கு வந்தது. நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, சுகந்தா விற்கு பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, நேற்று தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார். தன்னுடைய தாய் வீட்டிற்குள் வரும் வரை கூட காத்திருக்க முடியாத சுதாவின் மகள்,  வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே வீதிக்கு சென்று தன்னுடைய தாயை கட்டித்தழுவி, பாசத்தை வெளிப்படுத்தியது, அந்த குழந்தை. நீண்ட நாட்களாக தன்னுடைய மகளை பிரிந்திருந்த சுகந்தாவும் தன்னுடைய குழந்தையை கண்ட சந்தோஷத்தில், கட்டித்தழுவி ஆனந்த கண்ணீரில் மூழ்கிவிட்டார்.

வீடியோ

- Advertisement -

இத்தனை பேரின் கண்ணீரும், பாசப் போராட்டமும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுடைய அழுகுரலும் இந்த உலகம் முழுவதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக பல பேரின் துயரங்களும், கஷ்டங்களும் அந்த இறைவனின் கண்களுக்கு தெரியாமலா போய்விடும்! கூடிய விரைவில் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
குழந்தையை பிரிந்து தவிக்கும் செவிலியரின் பாசப் போராட்டம்! அனைவரையும் கலங்க வைத்த வீடியோ காட்சி.

- Advertisement -