எந்த ராசிகாரர்கள் அன்பை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள் தெரியுமா ?

2073
love
- விளம்பரம் -

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனி சிறப்பு இருப்பதை போல் அன்பை வெளிப்படுத்தும் காதலுக்குரிய சிறப்பும் ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் எந்த ராசிக்காரர்கள் எப்படி அன்பை வெளிப்படுத்துவார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்

மேஷம்:
Mesham

மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வார். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்காமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார்கள்,காதலிக்கப்படுவார்கள்.

- Advertisement -

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்பு துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிகாரர்களுக்கு துலாம் ராசிகாரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்:
kadagam

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் குழந்தைகள், உறவினர்கள் மீது அனுப்பு செலுத்துவது நல்லது. உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிகாரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
Simmam

சிம்ம ராசிகாரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. இவர்களது இதயத்தில் பல விடயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டர்கள். ரொமாண்டிக் எண்ணம் அதிகம் இருக்கும்.

சிம்ம ராசி பெண்கள் தங்களுடைய கணவருடன் இனிமையான காதல் வாழ்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுபாட்டிட்குள்ளும் வைத்திருப்பார்கள். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி:
Kanni

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் உடலளவில் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விடயத்தில் விருப்பமுடையவர்கள்.

இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உள்ளவர்கள் இலட்ச்சியத்தை கடைபிடிக்கமாட்டார்கள். இவர்களுக்கு அன்பு மட்டுமே நிறைய சந்தோசத்தை தரும். கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷத்தில் வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரகூடியவர்கள்.

துலாம்:
Thulam

எப்போதும் அடாவடியாக பேசிகொண்டிருக்கும் இவர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர்.

இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருச்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:
Viruchigam

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவரிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பர். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னை பார்க்க வேண்டுமென நினைப்பதால் இவர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாத கனியாகதான் இருக்கும். இவர்களுக்கு வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும்.

தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பர். எப்போதும் உற்சாகமாக இருப்பர். காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக இவர்கள் வாழ்வர். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் அதிலிருந்து விடுபடுவர். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருப்பார்கள்.

தனுசு:
Dhanusu

இவர்கள் காதல் வெற்றியடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றியடைய அதிகம் கஷ்டபடுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும் பகுதியை செலவழிப்பர். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவர். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவர். அவரின்பால் அதிக அன்பை செலுத்துவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிகாரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிகாரர்களுடன் காதல் வயப்பபடுவர்.

மகரம்:
Magaram

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்கமாட்டார்கள்.

மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். மகர ராசிகாரர்களுக்கு காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்:
Kumbam

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்களாக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.

காதலை பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வதும், புரிந்து வைத்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.

கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பாலாருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்:
Meenam

மீனா ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்கள்.

இந்த ராசிகாரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் செய்து முடிப்பர். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர்கள். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்க முடிவு செய்பவர்கள். இவர்களுக்கு கன்னி ராசிகாரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

தின ராசி பலன், ஜோதிடம் சம்மந்தமான பதிவுகள் மற்றும் ஆன்மீக தகவல்களை பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Advertisement