எந்த ராசிக்காரர்கள் எந்த குணத்தை மாற்றிக்கொண்டால் அதிஷ்டம் பிறக்கும்

astrology-2
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும், அந்த வகையில் ஜோதிட ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு எந்த வகையான தீய குளங்கள் இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:

- Advertisement -

mesham

மேஷ ராசிக்காரர்களுக்கு தலைக்குமேல் கோவம் வரும். இவர்களுக்கு பிடிக்காத சம்பவங்கள் நடக்கும்போது இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் மனதிற்குள் கோவக்கனல் பற்றி எரியும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல இவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் பொழுது இவர்களை கட்டுப்படுத்துவது கடினம். இந்த குணத்தை மட்டும் இவர்கள் மாற்றிக்கொண்டால் இவர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

ரிஷபம்:
rishabam

ரிஷப ராசிக்காரர்களுக்கு பேராசையும் பிடிவாதகுணமும் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த குணத்தின் காரணமாக சிலர் தங்களை வெறுக்கு நேரிடும். ஆகையால் பிடிவாதம் மற்றும் பேராசை குணத்தை தவிர்த்து, விட்டு கொடுத்து வாழ்ந்தால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்கார்கள் சுழுநிலை மற்றும் ஆர்வத்திற்கு ஏற்றவாறு தங்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இது மற்றவர்களை அவ்வப்போது உணர்ச்சி ரீதியாக பாதிக்கும் என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள மாட்டார்கள். இந்த குணத்தை அவர்கள் மாற்றிக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

கடகம்:
kadagam

கடக ராசிக்காரர்கள் மகிழ்ச்சி, கோபம், அழுகை போன்ற நுண்ணிய உணர்வுகளை அதிகப்படியாக வெளிப்படுத்துவார்கள். இது சில நேரங்களில் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு இவர்கள் மேல் வெறுப்பையும் தூண்டு. ஆகியால் கடக ராசிக்காரர்கள் எதையும் பக்குவமாக வெளிப்படுத்தினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்கள் தான் இருக்கும் இடத்தில் தான் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைப்பார்கள். இந்த குணம் சில நேரங்களில் தன்னுடைய நண்பர்களின் மனதை கூட பாதித்துவிடும். ஆகையால் ஆதிக்க குணத்தை விடுத்து எல்லோரும் சமம் என்று நினைத்தால் சிம்ம ராசிக்கார்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanni

கன்னி ரசிகர்களுக்கு தாழ்வு மனப்பான்மை சற்று அதிகமாகவே இருக்கும். இது இவர்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு உறவுகளை வளர்ப்பதையும் தடுத்துவிடும். ஆகையால் கன்னி ரசிகர்கள் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியில் வந்து நம்மை போல் தான் உலகில் உள்ள அனைவரும் என்று நினைத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

துலாம்:
thulam

துலாம் ராசிக்கார்கள் எப்போதும், நாம் இதை செய்தால் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தே பல வேலைகளை செய்வதில் தயக்கம் கொள்வர். இது இவர்களின் உற்பத்தி திறனை பாதிக்கும். இந்த குணத்தை இவர்கள் விட்டுவிட்டால் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்கார்கள் எப்போதும் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தாமல் மற்றவர்களிடம் மேலோட்டமாக பழகுவார்கள். சில நேரங்களில் இவர்கள் நடந்துகொள்ளும் விதம் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இது அவர்களின் நெருக்கமான உறவில் கூட விரிசல் விழ காரணமாக அமைந்துவிடும். ஆகையால் இத்தகைய குணத்தை அவர்கள் மாற்றிக்கொள்வது சிறந்தது.

தனுசு:
dhanusu

தனுசு ரசிகர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். கலாச்சாரம், ஆன்மீகம் இப்படி ஏதோ ஒன்றில் தங்களின் கவனத்தை செலுத்தி தனிமையில் இனிமை காண்பார்கள். இதனால் இவர்களை சுற்றி மிகவும் குறைவான நபர்களே இருப்பார்கள். இந்த குணத்தை இவர்கள் மாற்றி கொண்டு அனைவருடனும் சேர்ந்து இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaram

மகர ராசிக்கார்கள் அனைத்தையும் போட்டி மனப்பான்மையோடு பார்ப்பார்கள். தொழில், படிப்பு, வேலை என அனைத்தும் இவர்களை பொறுத்தவரை ஒரு போட்டி தான். அதில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று துடிப்பார்கள். இதன் காரணமாக சில நேரங்களின் இவர்கள் தங்களின் உறவுகளை மறந்து வேலையில் மூழ்க நேரிடும். ஆகையால் இவர்கள், போட்டி மனப்பான்மையை சற்று குறைத்து உறவுகளுக்கும் மதிப்பளித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
kumbam

கும்ப ராசிக்கார்கள் அனைத்திலும் தனித்தே ஈடுபடுவார்கள். இதனால் இவர்களை சுற்றி மிகவும் குறைவான ஆட்களே இருப்பார்கள். ஆகையால் இவர்கள் உறவுகளையும் நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்வது சிறந்தது.

மீனம்:
meenam

மீனம் ராசிக்கார்கள் எப்போதும் மரியாதையை சற்று அதிகமாகவே எதிர்பார்ப்பவர்கள். அதோடு சற்று சந்தர்ப்பவாத மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதை இவர்கள் மாற்றிக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். .

- Advertisement -