வெள்ளை ஷூக்களை பாலிஷ் போடாமல், தண்ணீர் ஊற்றாமல் கூட சுத்தம் செய்ய முடியுமா? அது எப்படி?

நம்முடைய வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஷூக்களை பராமரிப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை நிறத்தில் காலில் அணிந்து கொள்ளும் ஷூக்களில், அழுக்கு சீக்கிரமே படிந்து விடும். அழுக்குப் படிந்த ஷூக்களை தண்ணீரில் போட்டு, சோப்பு பவுடர் போட்டு, ஊற வைத்து துவைத்தால், அந்த ஷூ சீக்கிரமே பழுதாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அழுக்கு படிந்த வெள்ளை நிற ஷூக்களை தண்ணீரிலும் போடக் கூடாது. அதே சமயம் சுத்தமாகவும் செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக இதோ!

baking-soda

முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் போட்டு கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பயன்படுத்தும் பல் துலக்கும் பேஸ்ட் 1 ஸ்பூன் அளவு போட்டுக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழ சாறு 1 ஸ்பூன். பேக்கிங் சோடா என்பது ஆப்ப சோடா, இட்லி சோடா, சமையலுக்கு பயன்படுத்தும் சோடா.

மூன்றே பொருட்கள் தான். பேக்கிங் சோடா, எலுமிச்சை பழச்சாறு, பெஸ்ட் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் எத்தனை ஷூக்கள் இருக்கிறதோ  அதற்கேற்றாற்போல் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

paste

இப்போது நீங்கள் சாரு பிழிந்து எடுத்த எலுமிச்சை பழத்தின் தோல் இருக்கும் அல்லவா? அதிலேயே கூட இந்த கலப்வையை தொட்டு, உங்களுடைய ஷூக்கள் மேல் தடவி தேய்த்து கொடுக்க வேண்டும். கரை இருக்கும் இடத்தில் மட்டும் தான் தடவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேல்பக்கம் இருக்கக்கூடிய எல்லா இடத்திலும் செய்து கொடுங்கள்.

- Advertisement -

சில ஷூக்கள் ஓரங்களில் கட்டம் கட்டமாக டிசைன்ஸ் இருக்கும். அந்த இடத்தில் எல்லாம் பல் தேய்க்கும் பிரஷ் ஆல் இந்த கலவையை தொட்டு நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். ஊற வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கூட கிடையாது. ஒரு நல்ல காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து, பிழிந்து அந்த துணியை கொண்டு இந்த ஷூவை துடைத்து விடுங்கள். அழுக்கு சுலபமாக மொத்தமாக அந்தத் துணியில் வந்துவிடும்.

shoes1

மீண்டும் ஒருமுறை அழுக்குத் துணியை நல்ல தண்ணீரில் அலசி விட்டு, அந்தத் துணியைக் கொண்டு இரண்டாவது முறை துடைத்தால் உங்கள் ஷூ துடைப்பதற்கு முன்னாடி இருந்ததற்கும், துடைத்ததற்குப்பின் இருந்ததற்கும் நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். கொஞ்ச நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

shoes

ஷூக்களுக்கு உள்ளிருக்கும் கெட்ட வாடை போவதற்கு கொஞ்சமாக சோடா உப்பை, ஷூ விற்கு உள்ளே தூவி, ஒரு நாள் இரவு முழுவதும்  விட்டு விட வேண்டும். மறுநாள் காலை அதை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கீழே கொட்டி விட வேண்டும். தேவையற்ற நாற்றம் அடிக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

shoo

சில பேர் கேன்வாஸ் சுவை பயன்படுத்துவார்கள். கேன்வாஸ் ஷூவிருக்கும் இதே குறிப்பை பின்பற்றலாம். ஆனால், வெள்ளை நிறம் அல்லாத, மற்ற நிற ஷூக்களை இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம், கொஞ்சம் வெள்ளைத் திட்டுக்கள் படியும் என்பதால், மற்ற வண்ண ஷூக்களை, மேல் சொன்ன முறைப்படி சுத்தம் செய்து விட்டு அதன் பின்பு, 1 கப் அளவு தண்ணீரில் மூழ்க வைத்து, கழுவி  வெயிலில் உலர வைக்க வேண்டும். கருப்பு ஷூவுக்கு இதை பயன்படுத்தினால் அதிகப்படியான திட்டுக்கள் தெரியும். முடிந்தவரை கருப்பு நிற ஷூ க்களுக்கு இதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.