வீட்டிற்கு செல்ல பாகனுக்கு அனுமதி கொடுக்கும் யானை – வீடியோ

Elephant

வீடியோ கீழே உள்ளது.
இந்து மத சாஸ்திரப்படி யானைகள் அனைத்தும் தெய்வமாக பாவிக்க படுகிறது. இதற்கு சான்றாக தென் இந்திய கோவில்கள் பலவற்றில் இன்றும் யானைகளை நாம் காணலாம். அதோடு யானையிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக நம்மில் பலர் பயபக்தியோடு யானை முன்பு தலை குனிந்து ஆசிர்வாதம் பெறுவது வழக்கம். இப்படி தெய்வமாக பாவிக்கப்படும் யானையிடம் யானை பாகன் ஒருவர் தான் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்கும் காட்சி இதோ.

கேரளா கோவில்கள் பலவற்றில் அதிக அளவிலான யானைகளை நாம் பார்க்க இயலும். யானைக்கு தினமும் உணவு கொடுப்பது அதை சிறப்பாக பராமரிப்பது போன்ற வேலைகளை யானை பாகன் செய்கிறார்கள். அந்த வகையில் ஒரு யானை பாகன் மிகவும் அன்போடு யானையிடம் இருந்து வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்க அந்த யானையும் அற்புதமாக தலை அசைகிறது. அதோடு அந்த யானைக்கு அவர் முத்தமிட்டு மகிழ்கிறார்.

இது போன்ற சம்பவங்கள் மென் மேலும் மிருகங்கள் மீது மனிதர்கள் கொண்டுள்ள அளப்பரிய அணிப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மனிதர்கள் சக மனிதர்களை மதிப்பதோடு மிருகங்களையும் மதிக்க வேண்டும் என்ற உணர்வை பெறுக செய்ய இந்த சம்பவங்கள் உதவுகிறது.