- Advertisement -

அஷ்டமி திதியில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

நாளை 12.8.2024 திங்கட்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதியானது வந்திருக்கிறது. நாளைய தினம் எல்லோரும் காவல் தெய்வமான பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதி அன்று பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களுப் தேடி வரும் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையில் நாளைய தினம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

நாளைய தினம் நீங்கள் குளிக்கின்ற நேரத்திலிருந்து அஷ்டமி வழிபாட்டை தொடங்கி விட வேண்டும். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் 2 துளசி இலை, 2 வில்வ இலைகளை போட்டு அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் கூட இந்த இரண்டு இலைகளையும் போட்டு ஐந்து நிமிடம் கழித்து பிறகு அந்த தண்ணீரை எடுத்து குளித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மதியம் குளித்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம் தவறு கிடையாது மாலை குளித்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். குளிக்கும்போது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே குளிக்கவும். நாளைய தினம் இந்த தண்ணீரில் குளிக்கும் போது உங்கள் உடம்பை பிடித்த பீடை நீங்கிவிடும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிறகு வழக்கம் போல உங்களுடைய வேலையை தொடங்குங்கள். நாளை மாலை உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும், சிவன் ஆலயத்தில் இருக்கும், பைரவர் சன்னிதானத்திற்கு செல்லுங்கள். செல்லும்போது ஒரு நல்ல எலுமிச்சம் பழமும் வாங்கிச் செல்லவும். பைரவ சன்னிதானத்தில் அமர்ந்து எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும்.

- Advertisement -

அங்கு இருக்கும் அச்சகரியிடம் இந்த எலுமிச்சம் பழத்தை கொடுத்து, பைரவுக்கு செவ்வல்லி பூக்களை வாங்கிக் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை பைரவரின் பாதத்தில் வைத்து, மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டிற்கு கொண்டு வந்து உங்களுடைய பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை நினைத்து, காவல் தெய்வமான பைரவரையும் நினைத்து, கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருக வேண்டும் என்று சொல்லி இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து பீரோவில் வைத்து விடுங்கள். நாளை தினம் மன நிறைவோடு பைரவரை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டாலே போதும். உங்கள் செல்வநிலை படிப்படியாக உயரத் தொடங்கிவிடும். நாளைய தினம் எக்காரணத்தைக் கொண்டும் எதிர்மறையான வார்த்தைகளை சொல்லி வைரவரை வழிபடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: நீங்கள் குபேரராக சொல்ல வேண்டிய மந்திரம்

நேர்மறையான வார்த்தைகளை சொல்லி வழிபாடு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் எதெல்லாம் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டுமோ, அந்த விஷயங்களை எல்லாம் பைரவர்களிடம் கேளுங்கள். நிச்சயம் வளர்பிறை அஷ்டமியில் உங்கள் முன்னேற்றத்திற்கு இந்த வழிபாடு கை கொடுக்கும்.

- Advertisement -
Published by