
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே நமக்குள் ஷாக் அடிக்கும். கரண்டை தொட்டால் கூட இவ்வளவு பெரிய ஷாக் நமக்கு வராது. சில சமயம் கரன்ட் ஷாக்கடித்து பிழைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் இந்த கடனில் சிக்கி இருப்பவர்கள், தினம் தினம் தங்களுடைய உயிரை பணயம் வைத்து தான் வாழ்கிறார்கள். அவமானத்திற்கு பயந்து தான் வாழுகிறார்கள். உயிரோடு இருந்தும் தினந்தினம் செத்துப் பிழைக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார்கள்.
அவ்வளவு பெரிய கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், இந்த சின்ன பரிகாரமே இன்று போதுமானது. இன்றைய தினம் திங்கட்கிழமை 14-7-2025 சங்கடஹர சதுர்த்தி திதி இருக்கிறது. இன்று மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். முடிந்தால் ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து பச்சரிசியின் மேல் நிற்க வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.
சிவப்பு நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பு வாய்ந்த பலனை தரும். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு விநாயகர் முன்பு அமர்ந்து, மனம் உருகி வேண்டுதல் வைத்தால், தீராத கஷ்டங்கள் கடன் சுமை எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. அவ்வளவு பெரிய தேங்காய் மூடியில், தேங்காய் எண்ணெய் ஊற்ற, எண்ணெய் வாங்க நிதிநிலைமை பற்றாய் குறையாக உள்ளது என்றால் மண் அகல் விளக்கிலாவது தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி வைத்துவிட்டு பிள்ளையார் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.
ஓம் கிலி அங் உங்
அகத்தியர் சொன்ன அஷ்ட விநாயகர்களுக்கும் உரிய அதிசக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தைச் சொன்னால் அனைத்து ரூபத்தில் இருக்கக்கூடிய விநாயகரை வழிபாடு செய்த புண்ணியம் நம்மை வந்து சேரும். இன்று விநாயகர் கோவிலில் அமர்ந்து 108 முறை சொன்னால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் காரிய தடைகள் விலகும். கடன் சுமை நீங்கும் வாழ்க்கையில் சந்தோஷம் பிறக்கும்.
ஒருவேளை உங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், இன்று மாலை 6:30 மணி அளவில் வீட்டிலேயே பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகரின் திரு உருவப்படத்திற்கு முன்பு இந்த வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். எது எப்படியாக இருந்தாலும், வழிபாட்டின் போது உங்களுடைய கையில் கொஞ்சம் அருகம்புல்லை வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சக்தி வாய்ந்த சிலைகளின் திசைகள்
உங்கள் வேண்டுதல் நிறைவேறாமல் தடைபடுவதற்கு ஏதேனும் எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கம் இருந்தால் கூட, அந்த கெட்ட சக்தியை தகர்க்கும் வேலையை கையில் இருக்கும் அருகம்புல் பார்த்துக் கொள்ளும். இந்த அதிசக்தி வாய்ந்த வழிபாடும் பரிகாரமும் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.