
முகத்தை ஃபேசியல் செய்து ப்ளீச் செய்து வெள்ளையாக்க வேண்டும் என்றால் உடனடியாக பியூட்டி பார்லருக்கு தான் செல்ல வேண்டும். இந்த வெயில் காலத்தில் சருமம் அடிக்கடி டல் அடிக்க தொடங்கிவிடும். அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்றால் அதிகம் செலவாகும். வீட்டிலிருந்தபடியே மிக எளிமையான முறையில் பேசியல் ப்ளீச் செய்வது எப்படி என்பதை பற்றிய ஒரு அழகு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
வீட்டில் இருந்தபடியே முகத்திற்கு ப்ளீச் செய்வது எப்படி?
இந்த ப்ளீச் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். முட்டையின் வெள்ளை கரு – 2 ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, கான்பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன்.
முதலில் ஒரு சின்ன பவுலில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி ஒரு ஸ்பூன் அல்லது விஸ்கை வைத்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். முட்டையின் வெள்ளை கருவில் சின்ன சின்னதாக பபுள்ஸ் வரும். அதுவரைக்கும் கலந்து விடுங்கள். அதன் பிறகு பேக்கிங் சோடா, தேன், எலுமிச்சம் பழச்சாறு, ஊற்றி மீண்டும் கை விடாமல் ஒரு நிமிடம் போல அடித்து கலந்து கொள்ளுங்கள். இறுதியாக கான்பிளவர் மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் அடித்து கலக்க வேண்டும். நமக்கு ஒரு ஃபேஸ் பேக் தயாராக கிடைத்திருக்கும். இதை ஒரு பிரஷை கொண்டு தான் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
முகத்தை மேக்கப் எதுவும் இல்லாமல் சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை தொட்டு முகம், கழுத்து முழுவதும் தடவி அப்ளை செய்து கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்ததும் முகம் அப்படியே இறுக்கிப்பிடிக்க தொடங்கும். இதில் முட்டையின் வெள்ளை கரு இருக்கிறதல்லவா. ஸ்கின்னை டைட்டன்செய்யும். பிறகு நம் போட்ட பேக்குக்கு மேலே இரண்டாவது முறை தயார் செய்து வைத்திருக்கும் பேக்கை அப்ளை செய்து, மீண்டும் காய வைத்து விடுங்கள். 15 நிமிடம் கழித்த பிறகு பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு பாருங்கள். முகம் ப்ளீச் செய்வது போல பளிச்சு பளிச்சுன்னு இருக்கும்.
வாரத்தில் ஒரு நாள் இந்த ப்ளீச்சை செய்து வர உங்களுடைய முகம் நிரந்தரமாக வெள்ளையாக மாறத் தொடங்கும். அல்லது திடீரென்று பார்ட்டிக்குப் போக வேண்டும் என்றால் இந்த ப்ளீச்சை செய்து கொள்ளலாம். வெயிலில் சென்று முகம் கருத்து விட்டாலும் இந்த ப்ளீட்சை செய்வதன் மூலம் சன் டேன் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: இந்த சீக்ரெட் மட்டும் உங்களுக்கு தெரிஞ்ச போதும், செலவே பண்ணாம, பார்லர் போகாம கேரள பெண்களை போல வசீகர அழகுடன் ஜொலிப்பீங்க. அப்புறம் பாக்குறவங்க எல்லாம் நீங்க கேரளவான்னு கேப்பாங்க.
இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பு லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்து பாருங்கள். அரிப்பு, ரேஷஸ், வரும்படி தெரிந்தால் சருமத்தில் எரிச்சல் தெரிந்தால் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். சில பேருடைய சருமத்திற்கு சில பொருட்கள் ஒத்து வராது. ஆகவே பரிசோதனைக்கு பின்பு பயன்படுத்துவது நல்லது.