- Advertisement -
- Advertisement -

பணம், நகை, வண்டி, வாகனம், வீடு சொத்து இவைகளை வைத்திருப்பவர்கள் மட்டும்தான், கோடீஸ்வரர் என்பது அர்த்தம் கிடையாது. இதையும் தாண்டி ஆரோக்கியம், ஆனந்தம், நிம்மதி, குடும்ப ஒற்றுமை, சந்தோஷம் இவைகளை வைத்திருப்பவர்களும்  கோடீஸ்வரர் தான். உங்களுக்கு மேலே சொன்ன விஷயங்களில் எது தேவை. நிம்மதி வேண்டுமா, சந்தோஷம் வேண்டுமா, குடும்ப ஒற்றுமை வேண்டுமா? அல்லது பணம்தான் வேண்டுமா.

எதை கேட்டாலும் பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வாரி கொடுக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பிரபஞ்சத்தின் மீது நீங்கள் சந்தேகப்படாமல் எதை கேட்டாலும் பிரபஞ்சம் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கும். கேட்ட வரம் உடனே கிடைக்க வேண்டும் என்றால் அதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. சில விசேஷ நாட்களில் பிரபஞ்சத்திடம் கேட்கும்போது அந்த பிரபஞ்சம் நாம் கேட்டதை தட்டாமல் நமக்கு கொடுத்து விடும்.

- Advertisement -

பிரபஞ்ச வசிய நாள் பரிகாரம்

இன்று 21-6-2025 பிரபஞ்ச வசிய நாள். இன்றைய தேதியில் கூட்டுத் தொகை 3. மாதம் 6. வருடத்தின் கூட்டுத்தொகை 9. 3 6 9 இன்றைய நாள் முடியும் தருவாயில் நமக்கு ஒரு நல்ல இறுதி வாய்ப்பு. தூங்க செல்வதற்கு முன்பு இந்த ஒரு வார்த்தையை மட்டும் பின் சொல்லக்கூடிய முறைப்படி 369 முறை பிரபஞ்சத்தையும் சொல்லிப்பாருங்கள். பிரபஞ்சம் உங்களுக்கு மீண்டும் மீண்டும்  நல்லதை திருப்பிக் கொடுக்கும். அது என்ன வார்த்தை.

பிரபஞ்ச மந்திரம்

எனக்கு நல்லது மட்டும் செய்யும் பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்.

- Advertisement -

இவ்வளவுதான். “நன்றி” என்ற வார்த்தைக்கு நிறைய பவர் இருக்கு. இந்த வார்த்தையை இன்று 365 முறை சொல்லிவிட்டால், இந்த பிரபஞ்ச நினைத்தாலும் கெடுதலை உங்களுக்கு கொடுக்க முடியாது. பிரபஞ்சம் உங்களுக்கு கெடுதலை செய்யாது.

பிரபஞ்சம் நன்றியோடு உங்களுக்கு நல்லதை மட்டுமே கொடுத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்குள் அப்படி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வந்துவிடும். இது உங்களுடைய வாழ்க்கைக்கு என்னென்ன நல்லது தேவையோ அதையெல்லாம் கொண்டு வந்து உங்களுடைய கையில் சேர்க்கக்கூடிய வார்த்தை. மறக்காம சொல்லுங்க.

- Advertisement -

இதில் ஒரு சூட்சம மெத்தட் இருக்கு. 365 முறையும் நம்மால் பூமியை தொட்டு நமஸ்காரம் செய்து இந்த வார்த்தையை சொல்ல முடியாது. ஆனால் 365 முறையும் பூமியை தொட்டு நமஸ்காரம் செய்து இந்த மந்திரத்தை இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு சொன்னால் பிரபஞ்சம் நல்லது செய்ய உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும்.

அது கொஞ்சம் கஷ்டம் தான், முதல் மூன்று முறை மட்டுமாவது இந்த மந்திர வார்த்தைகளை சொல்லும்போது மட்டும் பூமியை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு, நமஸ்காரம் செய்து கொண்டு, வானத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொன்னால், நீங்கள் தான் அடுத்த கோடீஸ்வரர். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, சந்தோஷம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, பிரபஞ்சம் உங்களை ஏமாற்றவே ஏமாற்றாது. முயற்சி செய்துதான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே: சாதம் சாப்பிடும் முறை

பணம் காசா கேட்கின்றோம். இந்த வார்த்தையை 365 முறை சொல்லப் போகிறீர்கள். அவ்வளவுதான் ஒரு மணி நேரம் செலவு செய்தால் கூட, அடுத்த பல வருடத்திற்கு பிரபஞ்சம் நன்றி கடனோடு உங்களுக்காக வேலை செய்யும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் சமர்ப்பணம். நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்யக்கூடாது. குறிப்பா இதுபோல manifestation method நம்பிக்கை இல்லாமல் செய்தால் பலன் கிடைக்காது என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -