- Advertisement -
- Advertisement -

18-09-2024 முதல் 2-10-2024 வரை இந்த 14 நாட்களும் மகாளய பட்சம் இருக்கிறது. இந்த நாளில் பொதுவாக தினம்தோறும் விரதம் இருந்து தினம் தோறும் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் எல்லோராலும் இன்றைய சூழ்நிலையில் இந்த 14 நாட்களும் விரதம் இருந்து முன்னோர்களை வழிபாடு செய்ய முடியாது.

ஆனால் 21/9/2024 தேதி வரவிருக்கும் சனிக்கிழமை அன்று மட்டுமாவது முன்னோர்களை நினைத்து வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயம் உங்களுக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வரும் சனிக்கிழமை அப்படி என்ன விசேஷம். வரும் சனிக்கிழமை மகாபாரணி நட்சத்திரம். இது எமதர்மராஜாவுக்கு உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த நாளில் மட்டுமாவது முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மாதம் தோறும் வரக்கூடிய நட்சத்திரத்தை வெறும் பரணி நட்சத்திரம் என்று சொல்லுவார்கள். இந்த புரட்டாசி மாதம் மகாலய பட்சத்தோடு சேர்ந்து வந்திருக்கும் பரணி நட்சத்திரத்திற்கு தான் ‘மகாபரணி’ நட்சத்திரம் என்று பெயர். ஆகவே இந்த நாளை யாரும் தவற விடாதிங்க இந்த நாளில் எப்படி வழிபாடு செய்வது.

21/9/2024 சனிக்கிழமை காலை 8:04 மணிக்கு பரணி நட்சத்திரம் பிறந்து 22-9-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 6:42 வரை பரணி நட்சத்திரம் இருக்கிறது. சனிக்கிழமை காலை 8:00 மணிக்கு மேலாக முன்னோர்களுக்கு உங்களால் முடிந்தால் திதி தர்ப்பணம் கொடுத்து வழிப்பாட்டை மேற்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் எள்ளு தண்ணீரையும் ஒரு மரத்திற்கு அடியில் ஊற்றி முன்னோர்களை நினைத்து நமஸ்காரம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுடைய முன்னோர்களது திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரசாதம் சமைத்து வைத்து அவர்களை மனதார நினைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. முன்னோர்களுக்கு படைத்த அந்த உணவை காகத்திற்கு வைத்து விடவும். இந்த முறைப்படி வரும் சனிக்கிழமை முன்னோர்களை நீங்கள் நினைத்து வழிபாடு செய்தால் பித்ரு தோஷம் விலகும்.

இதையும் படிக்கலாமே: 20-09-2024 மைத்ரேய முகூர்த்த நேரம்

முன்னோர்களின் சாபம் விலகும் முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த மகாளய பட்சத்தில் 14 நாட்களும் முன்னோர்களை வழிபாடு செய்த புண்ணியத்தையும் பெறுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

- Advertisement -