
தற்போது மகாளய பட்சமானது நடந்து கொண்டிருக்கிறது. 18-09-2024 முதல் 2-10-2024 வரை மஹாளய பட்சம் நாட்கள். இந்த மகாளய பட்சத்தோடு சேர்ந்து நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. தேய்பிறை பஞ்சமி திதி, ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் சிறப்பு. கூடவே மஹாளய பட்சமும் இருப்பது நமக்கு கூடுதல் சிறப்பு.
நாளைய தினம் ஒவ்வொருவரும் மனதார வாராஹி தாயை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். நாளைய தினம் உங்கள் கடன் பிரச்சனை தீர, வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் என்ன பரிகாரம் செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
உங்கள் வீட்டில் வாராஹி சிலை திருவுருவப்படம் இருந்தால் அதற்கு அலங்காரம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எங்கள் வீட்டில் வாராஹிம் சிலை, திருவுருவப்படம் எதுவுமே இல்லை என்றாலும் சரி ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அதை வாராஹியாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபச்சுடரில் வாராகி உங்களுக்கு அருள் பாவிப்பால். பூஜை அறையில் ஒரு பிரத்தியேகமான முடிச்சை தயார் செய்து வைக்கப் போகின்றோம்.
சிவப்பு நிற துணியில் 1 கைப்பிடி கல் உப்பு, 3 கிராம்பு, 1 ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் வைத்து, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். முன்னோர்களையும் அம்பாளையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் வைக்கவும். அம்பாள் படம் இருந்தால் அதற்கு முன்பு வையுங்கள். இல்லையென்றால் ஏற்றி வைத்திருக்கும் விளக்குக்கு பக்கத்தில் முடிச்சை வைத்துவிட்டு வாராகி யின் இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள் போதும். மனம் உருகி உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஓம் வாம் வாராகி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராகி கன்யகாயை நம
நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். மந்திரத்தை சொல்லிவிட்டு பிரார்த்தனையை செய்து விட்டு, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். சரி நாளைய தினம் இந்த பஞ்சமி நாயகியை எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரியுமா. பஞ்சமி வழிபாடு என்றாலே அது மாலை நேர வழிபாடு தான் சிறப்பு என்று சொல்லுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 9:00 மணிக்குள் இந்த வழிபாட்டை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். வழிபாட்டை முடித்துவிட்டு கையோடு அந்த சிவப்பு துணியில் முடிந்து வைத்திருக்கும் கல் உப்பை எடுங்கள். ஒரு சுத்தமான பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி இந்த கல்லுப்பை உங்கள் கையால் எடுத்து அந்த தண்ணீரில் கரைக்க வேண்டும்.
என்னுடைய கடன் கஷ்டங்கள் எல்லாம் இந்த கல்லுப்பு கரைவது போல கரைந்து போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள். அந்த உப்புக்கு உள்ளே வைத்திருந்த ஏலக்காய் கிராம்பை எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். அடுத்த பஞ்சமி திதி வரும்போது பழைய ஏலக்காய் கிராம்பை எடுத்து வெளியில் போட்டு விட வேண்டும். இதுதான் பரிகாரம்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் அதிகரிக்க புரட்டாசி சனிக்கிழமை பரிகாரம்
21/9/2024 சனிக்கிழமை இரவு 11:43 மணிக்கு பஞ்சமி திதி பிறந்து விடுகிறது. 22/9/2204 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை பஞ்சமி திதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிய ஆன்மீகம் செல்லும் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றுங்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.