
இந்த மே மாதத்தின் இரண்டாவது சனி மகா பிரதோஷம் ஆனது நாளைய தினம் 24-5-2025 ஆம் தேதி வரவிருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானை பின் சொல்லக்கூடிய முறைப்படி யார் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்கள் எல்லாம் உடனே கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தேவையில்லாமல் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கின்றதோ, அந்த கெடுதல் எல்லாம் உடனே விலகும். நாளைய தினம் யாரும் சிவன் வழிபாட்டை தவற விட்டுராதீங்க. வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை பெறுவதற்கு இந்த வழிபாடு நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.
அப்பன் சிவனுக்கு தியாகராஜன் என்ற பெயரும் இருக்கிறது. திருவாரூரில் இருக்கும் மிகப் பெரும் பழமையான திருக்கோவில் தியாகராஜ பெருமாள் கோவில். சிவனிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் நமக்காக அவர் தியாகம் செய்து விடுவாராம். நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை எல்லாம் அவர் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்வாராம். சிவனுடைய சுபாவமே இதுதான்.
சிவன் தனக்கென்று எந்த நல்லதையுமே வைத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கு தியாகம் செய்யக்கூடிய இடத்தில் இருப்பதால்தான், இவருக்கு இந்த தியாகராஜன் என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரிங்க நாளை பிரதோஷத்திற்கு என்னதான் செய்வது.
பிரதோஷ நேரம் என்பது மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. இந்த இடைப்பட்ட நேரத்தில் குறைந்தது 24 நிமிடங்கள் சிவன் கோவிலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அது எந்த 24 நிமிடங்களாக இருந்தாலும் சரிதான். இருந்தாலும் நாளை சனிக்கிழமை வரக்கூடிய மாலை நேரம் 5 மணியிலிருந்து 6 மணி வரை சுக்கிர ஓரையாக இருக்கிறது. இந்த நேரத்தில் சிவன் கோவிலில் இருந்தால் அது சிறப்பு. இதற்க்கு இடைப்பட்ட 1 மணி நேரத்தில், வரக்கூடிய ஏதாவது 24 நிமிட நேரத்தை இந்த சனி மஹா பிரதோஷம் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 24 நிமிடம் என்பது 1 நாழிகை.
பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலில் அமர்ந்து இரண்டு மகா சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒன்று சிவன் ருத்ர மந்திரம். இரண்டாவது சிவபுராணம். இந்த இரண்டு பாடல்களைப் படித்துவிட்டு சிவபெருமானிடம் நீங்கள் எந்த வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.
ஓம் நமோ பகவதே ருத்ரயே
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
சிவபுராணத்தில் இருக்கும் முதல் நான்கு வரிகளை மட்டும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய முழு பாடலை நீங்கள் படிக்க வேண்டும். இணையதளத்தில் சென்றால் இந்த பாடல் உங்களுக்கு எளிமையாக கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோல எவரொருவர் பிரதோஷ நேரத்தில் இந்த இரண்டு பாடல்களை பாடி, சிவன் கோவிலில் அமர்ந்து, வேண்டிக்கொண்டாலும் சரி, உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் என்பதுதான் நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: பணம் பெயர் புகழ் பதவி அந்தஸ்து கிடைக்க தாயார் வழிபாடு
இதுபோக, நீங்கள் கோவிலுக்கு அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பது, வில்வ இலைகளை வாங்கி கொடுப்பது, எல்லாம் இரண்டாம் பட்சம். சிவனுக்கு பிடித்தது பாடலும் மந்திரமும் தான். அவனை வேறு எந்த பொருளைக் காட்டிலும் மயக்கம் முடியாது. இரண்டு வரி பாடலை பாடினால் மனம் மயங்கி நீங்கள் கேட்ட வரங்களை கொடுத்து விடுவான். நாளை வரவிருக்கும் சனி மஹா பிரதோஷத்திற்கு இந்த வழிபாட்டு குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.