- Advertisement -

நாளை 6-6-2025 பிரபஞ்ச வசிய நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்.

- Advertisement -

நாளை 6ஆம் தேதி, 6வது மாதம். இந்த நாள் பிரபஞ்ச வசிய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. 6 என்பது சுக்கிர பகவானுக்கு உரிய எண். 6 என்றால் நம் நினைவுக்கு வருவது ஆறுமுகன். 6 தீபம் ஏற்றி தான் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். ஆகவே நாளைய தினம் முருகர் வழிபாடு செய்வதும் அதிசிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். சுக்கிர பகவானை வழிபாடு செய்வதும் அதிசிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.

சுக்கிரன் என்றால் வெறும் பணத்தை மட்டும் குறிப்பது கிடையாது. கணவன் மனைவி உறவு, காதல், அன்பு, மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை ராஜ வாழ்க்கை இவைகள் எல்லாமே சுக்கிர பகவானால் மட்டுமே நமக்கு கிடைக்கும். ஆகவே நாளைய தினம் இந்த சுக்கிரனை வசியம் செய்ய, நாளை காலை 6:00 மணிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன. ஆன்மீகம் சார்ந்த சில எளிமையான தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

6ம் தேதி 6ஆம் மாதம், காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. தவறவிட்டவர்கள் மாலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். முதலில் எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரத்தை செய்யப் போறீங்க. அதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு பிராத்தனையாக இருக்கட்டும். ஒரு வரியில் அந்த பிரார்த்தனையை எழுதி விடுங்கள்.

உதாரணத்திற்கு கணவன் மனைவி ஒன்றாக வேண்டும். நானும் என் மனைவியும் ஒன்று சேர வேண்டும் என்று எழுதலாம். உங்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்தால், நான் பணத்தை எளிதில் சம்பாதிப்பேன் என்று அந்த காகிதத்தில் எழுதலாம். வருமானம் உயர வேண்டும் என்று எழுதலாம். விருப்பம் உங்களுடையது தான்.

- Advertisement -

பரிகாரம் செய்முறை

ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுக்கிர பகவானின் இந்த குறியீட்டை வரைந்து கொள்ளுங்கள். குறியீடு மேலே புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து வரைந்து கொள்ளுங்கள். அதற்கு கீழே 6 முறை உங்களுடைய வேண்டுதலை அந்த பேப்பரில் எழுதி விடுங்கள்.

ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப தண்ணீர் எடுத்துக்கொண்டு, அந்த டம்ளருக்கு அடியில் இந்த பேப்பரை வைத்து விட்டு, நீங்கள் வேண்டிய நல்லது உங்களுக்கு நடந்து விட்டது என்று நினைத்து நன்றாக மகாலட்சுமியும் சுக்கிர பகவானையும் வேண்டி அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். அவ்வளவுதான். சுக்கிர பகவான் உங்களுக்கு வசியமாகிவிடுவார். (நீங்க அந்த பேப்பரில் என்ன விஷயத்தை எழுதி வைத்துள்ளீர்களோ அது நல்லபடியாக நடந்து விட்டது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்).

- Advertisement -

நீங்கள் எந்த விஷயத்தை நெருங்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, எந்த விஷயத்தை அடைய வேண்டும் என்று நினைத்தீர்களோ, நீங்கள் வைத்த அந்த குறிப்பிட்ட வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும். அதற்கான முயற்சிகளை நீங்கள் தான் செய்ய வேண்டும். மந்திரம் போட என்றுமே மாங்காய் காய்க்காது. குழப்பமாவே இருக்கும் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு தெளிவை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய பரிகாரம் தான் இது. தண்ணீரைக் குடித்துவிட்டு அந்த பேப்பரை மடித்து ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக உங்கள் வீட்டு அலமாரியில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை 6-6-2025 செய்ய வேண்டிய பெருமாள் மற்றும் முருகன் வழிபாடு

உங்களுடைய கோரிக்கை நிறைவடைந்த உடன் அந்த பேப்பரை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி பேப்பரை நெருப்பில் போட்டு சாம்பலாக்கி விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -