- Advertisement -

666 பிரபஞ்ச வசிய நாளில் மகாலட்சுமி விளக்கு பரிகாரம்

- Advertisement -

இன்று பிரபஞ்ச வசிய நாள், இன்று காலை 6:00 மணிக்கு உங்களுடைய ஆசையை வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொன்னீர்களா.  காலை 6:00 மணி வழிபாட்டை தவறவிட்டவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. 6-6-2025 இன்று மாலை 6 மணி ஒரு வரப்பிரசாதம். இந்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் ஒரு நல்லதை கேட்டால், இந்தப் பிரபஞ்சம் கோடி நன்மைகளை உங்களுக்கு கொட்டிக் கொடுக்கும்.

அதிசக்தி வாய்ந்த இந்த நாளில் மாலை 6 மணிக்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றித்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்று நிறைந்த வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய நாள். இந்த நாளில் பிரபஞ்ச வசிய நாளும் சேர்ந்து வந்திருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட எண் 666 என்பது சுக்கிர பகவானுக்கு உரிய நம்பர். இன்று இன்னொரு சிறப்பு உள்ளது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதியும் இன்று இருக்கிறது. இத்தனை சக்தி வாய்ந்த நாளை நாம் தவறவிடலாமா. இன்று மாலை பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். அந்த விளக்கில் 6 டைமண்ட் கற்கண்டுகள் போட்டுக் கொள்ளவும். டைமண்ட் கற்கண்டு சுக்கிர பகவானுக்கு மகாலட்சுமிக்கும் உரிய ஒரு பொருள். இந்த பொருளைப் போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த தீபச்சுடர் ஒளியில் இந்த பிரபஞ்சத்திடம் உங்களுடைய வேண்டுதலை 6 முறை சொல்லுங்கள்.

நீங்கள் வைத்த வேண்டுதலை இந்த பிரபஞ்சம் அப்படியே நிறைவேற்றி வைக்கும். ஆமாங்க நம்பிக்கையோடு நீங்கள் செய்யும் இந்த வழிபாடு நல்லதை மட்டுமே உங்களுக்கு கொடுக்கும். உண்மையான நம்பிக்கையோடு சத்தம் போட்டு கூட உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் 6 முறை சொல்லலாம் எந்த அளவுக்கு ஆர்வத்தோடு அந்த வேண்டுதலை நீங்கள் சொல்கிறீர்களோ அதே வேகத்தில் அந்த வேண்டுதல் நிறைவேறிவிடும் பார்த்துக்கோங்க.

- Advertisement -

சாதாரணமாக வெள்ளிக்கிழமை என்றால் வீட்டு பூஜை அறை சுத்தபத்தமாக அலங்காரத்தோடு தான் இருக்கும். நீங்கள் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றினாலும் சரி, தனியாக மண் அகல் விளக்கு ஏற்றி, நல்லெண்ணையோ, நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்திருந்தாலும் சரி, அதில் 6 டைமண்ட் கற்கண்டுகளை மட்டும் போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, எவ்வளவு நல்ல விஷயங்களை கேட்டாலும், இந்த பிரபஞ்சம் வாரி வாரி கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பண தேவை பூர்த்தி அடைய ஏகாதசி வழிபாடு

குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த வழிபாடு உங்களுக்கு பல வகைகளில் நன்மையை செய்யும். இன்று மாலை 6:00 மணிக்கு, மேல் சொன்ன இந்த வழிபாட்டை யாரும் தவற விடாதீங்க. இந்த பதிவை இந்த பிரபஞ்சம் உங்கள் கண்களில் காட்டி இருக்கிறது என்றால், உங்கள் தீராத பிரச்சனைக்கு ஏதோ ஒரு வழியை சொல்லி இருக்கிறது என்பதுதான் அர்த்தம். மிஸ் பண்ணாதீங்க காலமும் நேரமும் யாருக்கும் காத்துக் கொண்டிருக்காது. அதை நாம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -