- Advertisement -
ஜோதிடம்

உங்க ராசிப்படி அட்சய திரிதிக்கு என்ன பொருள் வாங்கலாம்?

நாளை அட்சய திருதியை வருகிறது அல்லவா. ஆகவே, முடிந்தவர்கள் தங்கம் வாங்கலாம். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி வாங்கலாம். அதுவும் வாங்க முடியாதவர்கள் உங்கள் மனசுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கோங்க. சந்தோஷம்தான் நாளைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

இதோடு சேர்த்து அவரவர் ராசிக்கு என்ன பொருள் வாங்கினால் யோகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பு தானே. ஜோதிடத்தின் அடிப்படையில் பொதுப்படையாக 12 ராசிக்காரர்களும் நாளைய தினம் வாங்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதை பற்றிய தகவலை இந்த ஜோதிடம் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மோதிரம் டாலர் போன்ற பொருட்களை வாங்கலாம். வெள்ளியிலும் வாங்கலாம், தங்கத்திலும் வாங்கலாம், இது எதுவுமே எங்களால் வாங்க முடியவில்லை என்றால் வெள்ளை நிறத்தில் ஏதாவது துணி எடுக்கலாம். வெள்ளை நிற கைக்குட்டை எடுத்தாலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். வெண்பொங்கல் தயிர் சாதம் போன்ற பொருட்களை வாங்கி ஒருவருக்காவது அன்னதானம் செய்வது உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காப்பு கம்பல் போன்ற பொருட்களை வாங்கலாம். செம்பு காப்பு, பித்தளை காப்பு வாங்கினாலும் உங்களுக்கு யோகம் தாங்க. இது தவிர பெண்கள் தங்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை அலங்கார பொருட்களை வாங்கிக் கொள்ளவும். உங்களால் நாளைய தினம் பசு மாட்டிற்கு ஏதாவது பொருள் வாங்கித் தர முடியும் என்றால் அதை வாங்கி தானம் செய்யலாம்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வளையல் பிரேஸ்லெட் போன்ற பொருட்களை வாங்கலாம். பயனுள்ள புத்தகங்கள், ஆன்மீக புத்தகங்களை வாங்கலாம். உங்களால் முடிந்தால் ஏதாவது ஒரு ஏழைக் குழந்தைக்கு படிப்புக்கு உதவி செய்யுங்கள். நோட்டுப் புத்தகம் பென்சில் பேனா பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் செயின் வாங்குவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது தவிர உங்களால் முடிந்த மரம் செடி கொடிகளை வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். நாலு செடி வாங்கி நட்டு வைத்தாலும், உங்களுக்கு அது யோகம்தான். புதுசாக வண்டி வாங்கக் கூடிய வாய்ப்பு இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். தேவை உள்ளவர்கள் மட்டும். மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுவாங்க இல்லையா. அப்படி யாராவது ஒருவருக்கு நீங்கள் நாளைய தினம் உதவி செய்வது புண்ணியத்தை தரும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் டாலர் மூக்குத்தி போன்ற பொருட்களை வாங்கலாம். வெள்ளி தங்கம் உங்கள் சௌகரியம் எது வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளுங்கள். சர்க்கரையை வாங்குவது உங்களுக்கு யோகத்தை தரும். யாராவது ஏழையாக இருக்கக்கூடிய பெண்ணுக்கு என்ன தேவை இருக்கிறதோ அதை கேட்டு பூர்த்தி செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ஜிமிக்கி வாங்குவது யோகம் தரும். உங்கள் வீட்டு பூஜை அறைக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கலாம். வாசனை நிறைந்த ஊதுபத்தி சென்ட் போன்றவை வாங்குவது உங்களுக்கு நாளை யோகத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகள் யாராவது ஒருவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் காப்பு வாங்கலாம். பெண்களாக இருந்தால் கொலுசு வாங்கிக் கொள்ளுங்கள். ஏழை குழந்தைகளுக்கு உங்கள் கையால் ஏதாவது ஒரு விளையாட்டு பொருட்களை வாங்கி தானம் கொடுக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பறவைகளுக்கு உங்கள் கையால் ஒரு சொம்பு தண்ணீர் வைத்தாலும் அது புண்ணியம் தான்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மூக்குத்தி செயின் போன்ற பொருட்களை வாங்கலாம். உங்கள் வீட்டை அழகு படுத்துவதற்கு எந்த பொருள் தேவை என்றாலும் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஏதாவது சாதனம் தேவை என்றாலும் இன்று வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். படிக்க முடியாத யாராவது ஒரு ஏழை குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் காப்பு வளையல் போன்ற பொருட்களை இன்று வாங்கலாம். இது தவிர மங்களகரமான எந்த பொருள் வேண்டுமென்றாலும் வாங்குங்கள். மஞ்சள் குங்குமம் சந்தனம் ஊதுபத்தி போன்றவை பொருட்களை வாங்குவது உங்களுக்கு சுபிட்சத்தை தரும். வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானம் செய்யுங்கள். உங்கள் ரோட்டில் இருக்கும் நாய்களுக்கு உணவு கொடுங்க.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று மோதிரம் கம்பல் போன்ற பொருட்களை வாங்கலாம். இது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டுக்கு தேவையான ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள் தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு டியூப் லைட் வாங்கி மாட்டினாலும் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஒரு சின்ன குழந்தைக்கு கண்ணாடி வளையல் வாங்கி தானம் கொடுத்தால் சிறப்பு. உங்களால் முடிந்த நீர்மோர் இளநீர் பானகம் போன்ற பொருட்களை ஏழைகளுக்கு தானமாக கொடுங்க. தண்ணீர் கூட தானம் கொடுக்கலாம் தவறு கிடையாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சின்னதாக வெள்ளி டாலர் அல்லது செயின் வாங்கிக் கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்கள் பூஜை அறைக்கு தேவையான பொருட்களை இன்று வாங்கலாம். புதுசாக தொழில் தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்கலாம். புதுசாக ஏதாவது சொத்து வாங்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை என்றும் மேற்கொள்ளலாம். வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை இன்று செய்யுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஜிமிக்கி, டாலர் போன்ற பொருட்களை இன்று வாங்கலாம். வீட்டிற்கு அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய எந்த பொருட்களாக நீங்கள் வாங்கினாலும் அது உங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தான். யாராவது ஒரு ஏழை பெண்ணுக்கு இன்று உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். குறிப்பாக குச்சி போல இருக்கக்கூடிய பொருட்களை நீங்கள் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு. உதாரணத்திற்கு பென்சில் பேனா இந்த மாதிரி பொருட்களை வாங்கி தானம் செய்யலாம். அப்படி இல்லை என்றால் வாக்கிங் ஸ்டிக் போன்ற பொருட்களை வாங்கி முதியவர்களுக்கு தானம் கொடுக்கலாம்.

- Advertisement -