- Advertisement -
சமையல் குறிப்புகள்

அரிசியில் இந்த பாயசத்தை ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு விடவே மாட்டீங்க. உங்க வீட்ல ஒரு விசேஷம்னா இந்த பாயசத்தை மட்டும்தான் செய்வீங்க!

- Advertisement -

பாயாசம் என்று சொன்னாலே விதவிதமாக நிறைய பாயாச வகைகளை செய்யலாம். சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம் என்று பல வகைகள் உண்டு. ஆனால் இந்த பாசங்கள் அனைத்தையும் நம் வீட்டில் விசேஷ தினங்களுக்கு அடிக்கடி செய்து இருப்போம். நாம் சுவைக்காத ஒரு அரிசி பாயாசத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அரிசி, பச்சரிசி, என்று எந்த அரிசியில் வேண்டும் என்றாலும் இந்த பாயாசத்தை சுவையாக செய்யலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நெய் ஊற்றி முதலில் 10 முந்திரிப் பருப்புகள், 15 உலர் திராட்சைகளை போட்டு வறுத்து கடாயில் இருந்து நெய்யை வடித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடாயில் முந்திரி திராட்சை வறுத்து எடுத்ததில் மீதம் நெய் இருக்கும். அந்த நெயில் 1/4 கப் அரிசியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். (அதாவது 50 கிராம் அரிசி). இந்த அரிசி நன்றாக நெய்யிலேயே வறுபட்டு பொரிந்து பொன்னிறமாக வறுபடவேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசியை கருக விடாமல் ஜாக்கிரதையாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த அரிசியானது நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் பொடித்துக் எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி முழுமையாக அரைபட்டு விட்டால் பாயாசம் சுத்தமாக நன்றாகவே இருக்காது. கவனமாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்த அரிசி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது பாயாசம் செய்ய துவங்கி விடலாம். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 லிட்டர் அளவு காய்ச்சாத பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பால் நன்றாக காய்ந்து பொங்கி வரும் போது, பாலை நன்றாகக் கிளறி விடவேண்டும். இரண்டு நிமிடங்கள் பால் கொதித்த உடன், அதன் பின்பு வறுத்து பொடித்து வைத்திருக்கும் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் பாலோடு சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

5 நிமிடங்களில் பாலுடன் அரிசி சேர்ந்து நன்றாக கொதித்து, வெந்து பாயாசம் கெட்டி தன்மையாகி வரும். அந்த சமயத்தில் 3/4 கப் அளவு சர்க்கரையை பாயாசத்துடன் சேர்த்து, நன்றாக பாயாசத்தை கலந்து விட வேண்டும். சர்க்கரை சேர்த்து பாயாசம் மீண்டும் இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்கட்டும்.

அதன் பின்பு இறுதியாக இந்த பாயாசத்தில் மேல் வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சையை தூவி, 1/2 ஸ்பூன் ஏலக்காய்த்தூள் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுடச்சுட சூப்பரான அரிசி பாயாசம் தயார். மேலே சொன்ன அளவு களோடு 1/4 கப் அரிசிக்கு, 1/2 லிட்டர் பாலுடன் இந்த பாயசத்தை செய்தால் ஐந்திலிருந்து ஆறு பேர் தாராளமாக சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -