- Advertisement -

எதிரிகள் மற்றும் கண் திருஷ்டியை நீக்கும் பரிகாரம்

- Advertisement -

நம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் எதிரிகள் என்பவர்கள் இருப்பார்கள். அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் இருந்தாலும் சரி, சொத்து பணம் போன்ற எவற்றாலும் ஏதாவது ஒரு எதிரி என்பவர் இருப்பார். அவரால் நமக்கு தீராத தொல்லையாக இருக்கும். என்ன செய்தாலும் அந்த எதிரியை நம்மால் விலக்கச் செய்யவே முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதே சமயம் நமக்கு அதிகப்படியான கண் திருஷ்டி இருக்கிறது என்னும் பட்சத்திலும் இன்று இரவுக்குள் கொள்ளை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் இவை இரண்டும் முற்றிலும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கண் திருஷ்டியை நீக்கும் பரிகாரம்

எதிரிகள் மற்றும் கண் திருஷ்டியின் காரணமாக நம்முடைய குடும்பத்தில் எப்பொழுதுமே நிம்மதி இல்லாத ஒரு சூழ்நிலை உண்டாகும். இவை இரண்டும் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தீய சக்தியாகவே கருதப்படுகிறது. இந்த தீய சக்தியை விரட்டியடிப்பதற்கு பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருந்தாலும் இன்று ஏகாதசியுடன் சேர்ந்து வரக்கூடிய சனிக்கிழமை என்பதால் இன்று இரவுக்குள் கொள்ளை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்ய நம்மை சுற்றி இருக்கக் கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இரவு 9 மணிக்கு மேல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரே பொருள் கொள்ளு மட்டும்தான். கொள்ளை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து உங்களுடைய வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டில் ஏதாவது ஒரு இடத்திலோ, கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் அமர்ந்து இதை செய்வதாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து செய்தால் இன்னும் நல்ல பலன் தரும்.

இப்பொழுது உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்க வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், கண் திருஷ்டி விலக வேண்டும் என்று உங்களுக்கு எதுவெல்லாம் பிரச்சனையாக இருக்கிறதோ அவை அனைத்தையும் முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கொள்ளை ஒரு பேப்பரில் மடித்து வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று தீப்பெட்டியை வைத்து கொளித்தி விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கொளுத்தும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய கொள்ளு வெடிக்க ஆரம்பிக்கும். இவ்வாறு வெடிக்க ஆரம்பித்ததும் நாம் வீட்டிற்குள் வந்துவிடலாம். பிறகு மறுநாள் காலையில் வீட்டு வாசலை திறக்கும் பொழுது அதையும் பெருக்கி அப்படியே கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி இன்று இரவு நாம் செய்வதன் மூலம் நமக்கு எதுவெல்லாம் பிரச்சனை என்று நினைத்து நாம் வேண்டினோமோ அதுவெல்லாம் கொள்ளு வெடிப்பது போல் வெடித்து ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே:பணக்கஷ்டம் தீர்க்கும் பரிகாரம்

முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குறிப்பாக எதிரிகள் மற்றும் கண் திருஷ்டிகளின் தொல்லைகளில் இருந்து முற்றிலுமாக விலகுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -