- Advertisement -
பொது பலன்

Astrology : இந்த ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டமான மாதங்கள் எது தெரியுமா?

ஜோதிட கலை மிக பெரிய கடல் போன்றது. இந்த கலையில் ஒவ்வொரு நாளும் விண்ணில் இருக்கின்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் இன்ன பிற விடயங்களை அடிப்படையாக வைத்து, பலன்கள் கணித்து கூறப்படுகின்றன. அந்த வகையில் இந்த 2019 ஆம் ஆண்டு எந்த ராசியினருக்கு எந்த மாதங்கள் அதிர்ஷ்டம் மிகுந்த மாதமாக இருக்க போகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடகம்:

- Advertisement -

இந்தாண்டு கடக ராசிக்கு குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கும் நிலையில் இருப்பதால் அணைத்து விடயங்களிலும் கடகத்திற்கு வெற்றியே கிட்டும். குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பானதாகவே இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் போன்றோரை சந்திப்பீர்கள். உங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து வருங்காலத்தை வளமாக்கி கொள்வதற்கான பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:

- Advertisement -

விருச்சிகம் ராசிக்கு இந்தாண்டு தொடக்கத்தில் உடல்நலம் சார்ந்த குறைபாடுகள் நீங்கி பிறகு சரியாகும் நிலை உண்டானது. இந்த ராசிக்கு சனி சற்று பாதகமான நிலையில் இருப்பதால் எதிலும் சற்று கவனமாகவும், தீவிர முயற்சியுடன் செயல்பட்டாலே வெற்றி பெற முடியும். புதிய மனிதர்களின் தொடர்பால் பல நன்மைகள் உங்களுக்கு உண்டாகும் மே மாதத்திற்கு பிறகான காலங்களில் உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.

கன்னி:

- Advertisement -

கன்னி ராசியினருக்கு ஆண்டின் தொடக்கம் முதல் குடும்ப வாழ்வில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக தீர்ந்து குடும்ப ஒற்றுமை உண்டாகும். தம்பதிகள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலங்களில் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் உங்களுக்கு ஏற்றமிகு பலன்கள் இருக்கும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஒரு சிலர் புதிய வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்:

மீனம் ராசியினருக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏற்றமிகு பலன்கள் ஏற்படுவதாக இருக்கிறது. அதிலும் நீண்ட நாட்களாக உறவினர், நண்பர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்க பெறும் சூழல் உண்டாகும். ஏப்ரல் மாதம் முதலே மீன ராசியினருக்கு பல ஏற்றமிகு பலன்கள் ஏற்பட தொடங்கும். செப்டம்பர் மாதம் உங்களுக்கு அனைத்திலும் வெற்றியை தருகிற ஒரு மாதமாக இருக்கும். எப்படிப்பார்த்தாலும் 2019 ஆம் ஆண்டு மீன ராசியினருக்கு தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் பெறும் ஆண்டாகவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athirshta mathangal in Tamil. It is also called as Rasigal palan in Tamil or 12 rasis in Tamil or Jothidam rasi palan in Tamil or Athirshta matham in Tamil

- Advertisement -