- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

தொப்பையை குறைக்கும் சிறப்பான ஒரு உணவு. அடிவயிற்றின் கொழுப்பை குறைத்து வயிற்றை தடையாக்க இதை சாப்பிட்டு பாருங்கள்.

அடிவயிற்றில் அதிகம் கொழுப்பு சேர்ந்து வயிறு பெருத்து தொப்பை இருப்பது என்பது ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இதனால் உடை உடுத்துவதிலும் நமது தோற்றத்திலும் சங்கடம் தோன்றுகிறது. அடி வயிறு கொழுப்பு பிரச்சனை உடலின் வடிவமைப்பை மாற்றிவிடுகிறது. இதனை சரிசெய்யும் ஒரு சிறந்த உணவினைப் பற்றி இப் பதிவினில் பார்ப்போம் வாருங்கள்.

அடிவயிற்றில் தங்கியுள்ள நாட்பட்ட கொழுப்பை குறைக்க தேவைப்படும் உணவுப் பொருள் வெள்ளை அவல். வெள்ளை அவலை அதிகம் சிற்றுண்டிகள் செய்வதற்கு பயன்படுத்தி இருப்பீர்கள். இதில் நிறைய தாதுக்கள், மெக்னீசியம், விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பெரும்பாலும் அதிகம் சாப்பிடுவதாலும் சாப்பிட்டு விட்டு உடனே தூங்கி விடுவதாலும் தொப்பை உண்டாகிறது. இந்த தொப்பையை குறைப்பதற்கு கார்போஹைட்ரேட் அளவு குறைந்த ஒரு உணவை, அவலை பயன்படுத்தி செய்யப் போகின்றோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – 50 கிராம்
தயிர் – 5 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – பாதி அளவு
சீரகம் – 4 ஸ்பூன், தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:
முதலில் நான்கு ஸ்பூன் சீரகத்தை சிறிதளவு தண்ணீரில் உறவவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் அவலை சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, ஊறவைத்துள்ள சீரகத்தினை அதில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் சீரகம் நன்றாக கொதித்த உடன் அதனை நன்றாக ஆற வைக்க வேண்டும். சற்று வெதுவெதுப்பாக வந்ததும் ஒரு டம்ளரில் வடிகட்டியை பயன்படுத்தி சீரகத்தை வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு வெதுவெதுப்பான சீரக தண்ணீரில் பாதியளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் தயிரில் ஊறவைத்த அவலை உணவாக எடுத்துக்கொண்டு, எலுமிச்சை சாறு கலந்த சீரக தண்ணீரை பருக வேண்டும்.

- Advertisement -

தொப்பை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை காலையில் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவு உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிக அளவு வியர்வை சுரப்பிகளை உண்டாக்குகிறது. இதனால் அதிகம் வியர்த்து உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.

இந்த உணவின் பயன்கள்

இந்த உணவில் தயிர் சேர்த்து உள்ளதால் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் அதிகம் பசி எடுக்கும் தன்மையை குறைக்கிறது. அதனால் அதிக நேரம் பசி எடுக்காமல் இருக்கும். சீரகத்தில் உள்ள ஜீரண தன்மை உங்களின் உடம்பில் உள்ள நாட்பட்ட கொழுப்புகளை கரைக்க அதிகம் துணைபுரிகிறது. செரிமானத்தன்மை சரியாக இருந்தாலே நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்கி விடாமல் வெளியேற்றப்படும். எனவே இப்பொருட்களை சேர்த்து தயார் செய்யும் இந்த உணவினை தினமும் காலையில் எடுத்துக்கொண்டால் உங்கள் தொப்பை குறைந்து வயிற்றுப்பகுதி தட்டையாக மாறி வருவதை உங்களால் உணர முடியும். இந்த குறிப்பினை பின்பற்றி நீங்களும் பயன்பெறுங்கள்

- Advertisement -